பெரம்பலூர் மாவட்டம், பென்னகோணத்தில், 2 கோடி ரூபாய் மதிப்பில், புதிய துணை மின் நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.முதல்வர் ஜெயலலிதா, சட்டசபையில் அறிவித்தபடி,
பெரம்பலூர் மாவட்டம், பென்னகோணம் துணை மின் நிலைய திட்டத்திற்கு, இரண்டு கோடியே, 52 லட்சத்து, 17 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்திற்காக, இரண்டு ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த துணை மின்நிலையத்தில், உயர் அழுத்த மின்மாற்றி நிறுவப்பட்டுள்ளது. திருமாந்துறை, அத்தியூர், பெருமத்தூர், வடக்கலூர் மின்பாதைகள் மூலம் மின்சாரம் வினியோகம் செய்யப்பட உள்ளது.இந்த துணை மின் நிலையம் மூலம் லெப்பைக்குடிகாடு, பென்னகோணம், அத்தியூர், ரெட்டிகுடிகாடு, திருமாந்துறை, கழனிவாசல், வடக்கலூர், அகரம்சிகூர், எஸ்.ஆடுதுறை, பெருமத்தூர், சாத்தநத்தம் பகுதிகளுக்கு சீரான மின்சாரம் வழங்கப்படுவதுடன், மங்களமேடு, கீழப்பெரம்பலூர் துணை மின் நிலையங்களில் மின் பளு குறைக்கப்படும்.மேலும், இந்த திட்டத்தால், ஒரு ஆண்டுக்கு, 8.6 லட்சம் யூனிட் மின் இழப்பு தவிர்க்கப்படுவதால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு, 32 லட்சத்து, 16 லட்சம் ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்க உள்ளது. இந்த திட்டத்தால், 10 ஆயிரம் மின்நுகர்வோருக்கு சீரான மின் வினியோகம் செய்யப்பட உள்ளது.
நன்றி தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக