புதுடெல்லி: இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் குறித்து அரசும், பொது சமூகமும் கடைப்பிடிக்கும் மவுனம் கெட்ட செய்திக்கான அறிகுறி என்று ஆல் இந்தியா மஜ்லிஸே முஷாவரா தலைவர் டாக்டர் ஸஃபருல் இஸ்லாம் கான் தெரிவித்தார்.
இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததும் முஸ்லிம்கள் மீதான வன்முறைகள் துவங்கியுள்ளது.புனேயில் ஐ.டி அதிகாரி முஹ்ஸின் ஸாதிக்கை இந்துத்துவவாதிகள் கொலைச் செய்த சம்பவத்தை ஊடகங்களோ, மத்திய-மாநில அரசுகளோ, பொது மக்களோ ஒரு பொருட்டாக கருதவில்லை.இது முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை பொது சமூகம் எவ்வளவு அற்பமாக கருதுகிறது என்பதை நிரூபிக்கிறது.பா.ஜ.க அரசுக்கு உதவுவதே இந்த அணுகுமுறை.
பல்வேறு தாக்குதல்களில் தொடர்புடையவர்கள் சுதந்திரமாக சுற்றி திரியும்போது அவர்களை கைதுச் செய்ய அரசு முயற்சிக்கவில்லை.தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு இழப்பீடு வழங்க கூட முடியாத நிலைமை.ஆனால், இதுபோன்ற சம்பவங்களில் உதவிகளை வழங்க மத்திய -மாநில அரசுகளும், அரசியல் கட்சிகளும் போட்டியிடுகின்றன.சிறுபான்மை மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பாதுகாப்பே ஒரு அரசை மதிப்பீடுச் செயவதற்கான அளவுகோல்.
சிறுபான்மையினரை அடக்கி ஒடுக்குவதற்கான வாய்ப்பு கிடைத்திருப்பதாக நம்பும் இந்துத்துவாவினரை திருப்திப்படுத்தவும், சிறுபான்மையினரை மிரட்டவும் செய்யும் பா.ஜ.க அரசை நாடும், உலகமும் மதிப்பீடுச் செய்யத்தான் வேண்டும்.இவ்வாறு ஸஃபருல் இஸ்லாம் கான் தெரிவித்தார்.
நன்றி தூது ஆன்லைன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக