Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 9 ஜூன், 2014

ஐக்கிய அரபு அமீரகத்தில் ராணுவச் சேவை கட்டாயம்:அதிபர் அங்கீகாரம்!

அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத்தில்(யு.ஏ.இ) ராணுவ சேவைக்கான சட்டத்தில் அதிபர் ஷேக் கலீஃபா பின் ஸெய்யத் அல் நஹ்யான் அங்கீகாரம் அளித்துள்ளார்.
18 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட நபர்களுக்கு ராணுவ சேவை கட்டாயம்.பெண்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.செக்கண்டரி பள்ளிப்படிப்பை முடித்தவர்கள் 9 மாதமும், முடிக்காதவர்கள் 12 மாதமும் கட்டாய ராணுவ
சேவை செய்யவேண்டும். அரசின் கெஜட்டில் வெளியிட்ட பிறகு ஆறு மாதத்திற்குள் இச்சட்டம் அமலுக்கு வரும்.சேவையை பூர்த்திச் செய்தவர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் குறித்து சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.அரசு வேலை, தனியார் வர்த்தக நிறுவனங்களில் முன்னுரிமை, கல்வி உதவித்தொகை, திருமண உதவி, வீடு உதவி ஆகிய சலுகைகள் ராணுவ சேவையை பூர்த்திச் செய்தவர்களுக்கு வழங்கப்படும். 
சட்டவிரோத அமைப்புகளில் பணியாற்றிய நபர்களுக்கு ராணுவ சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.29 வயதிற்குள் தெளிவான காரணங்கள் ஏதுமில்லாமல் ராணுவ சேவையில் கலந்துகொள்ளாதவர்களுக்கு ஒரு மாதம் முதல் ஒருவருடம் வரையிலான சிறைத்தண்டனை அல்லது 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் திர்ஹம் வரையிலான அபராதமோ விதிக்கப்படும்.அதுமட்டுமல்ல, 30 வயது கழிந்தாலும் இவர்கள் ராணுவ சேவைச் செய்யவேண்டும் என்று சட்டம் கூறுகிறது. 
செகண்டரி கோர்ஸில் 80 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்களுடன் வெற்றிப் பெற்றவர்களுக்கு அவர்களுடைய படிப்பு பூர்த்திச் செய்ய அனுமதிக்கவேண்டும் என்று ஃபெடரல் நேசனல் கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.வேலையில் சேர்ந்தவர்களுக்கு ராணுவ சேவை காலக் கட்டத்தில் வேலைக்கான சலுகைகளும், பதவி மூப்பும் வழங்கப்படும். 
தேசத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு புதிய பாதுகாப்பு அணியை வார்த்தெடுத்தல் என்ற உத்தேசத்துடன் ராணுவ பயிற்சிகள் கட்டாய ராணுவ சேவைக் காலக்கட்டத்தில் அளிக்கப்படும்.ஆயுத படையைச் சார்ந்தவர்களுக்கு தேசப் பாதுகாப்பு தொடர்பான கூடுதல் பயிற்சி வழங்கப்படும்.
செய்தி:தேஜஸ்
நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக