Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 18 ஜூன், 2014

நமதூருக்கு எதிராக செயல்படும் நம்மவர்கள் ! ?

பிரச்சினைக்கு உரிய(து)வர்கள் ஆத்து ஓரம் உள்ள வீடுகளா ? அல்லது பேரூராட்சி து.தலைவரா ? 

நமதூரையோ அமைதிப்பூங்காவாக மாற்றி வரும் , மாற்றத்துடிக்கும் போர்வையில் ஊர்களில் எல்லாம் மூக்கை நுழைக்கும் நமது பேரூராட்சி து.தலைவர் இப்படிச் சீறினார். “ கிழக்கு 8 வார்டு உள்ளதால் அவர்கள் தான் பேரூராட்சியில் பெரும்பான்மையாக உள்ளனர். ஆனால் மேற்கு
7 வார்டு உள்ளதால் நாம் பெரும்பான்மை பெற முடியவில்லை. ஆகையால் நான் பேரூராட்சி தலைவர் ஆன உடன் நமது 1 வது வார்டை இரண்டாக பிரித்து காட்டுவேன் என மேற்கு பள்ளிவாசல் கீழ் தளத்தில் முன்னால் நாட்டாண்மை அன்வர் அவர்களின் கேள்விற்கு இப்போதைய பேரூராட்சி து.தலைவர் சொன்ன பதில் தான் மேலே கூறிய வார்த்தைகள். இதில் சுவாரசியம் என்ன வென்றால் மாமு (அன்வர் அவர்களை பார்த்து) சட்டத்தில் இடம் உள்ளது நான் பார்த்து கொள்கிறேன் என்றார்.”


ரௌடித்தனத்திற்கும் , நிர்வாகிகளுக்கும் சாராம்சத்தில் வித்தியாசமே கிடையாது. நீதி , நியாயம் , தர்மம் என எதுவுமே எடுபடாது. எவ்வளவு பெரிய ரௌடியையும் ஒரு சட்டத்தில் ஒரு எல்லைக்கு மேல் போகும் போது காவல்துறையால், நீதிமன்றத்தால் தண்டிக்க முடியும்.

ஆனால், மேற்கு ஜமாத் நிர்வாகிகள் பேரூராட்சி து.தலைவருக்கு கைப்பாவையாகவும், இவர்களின் நீதி டம்மியாகவே இருக்கிறது.

இந்த நிர்வாகிகளால் பேரூராட்சி து.தலைவரை விசாரிக்க முடிய வில்லை எனில் இனி எப்போதும் இவர்களால் விசாரிக்க முடியாது.


தற்போதைய நிலவரம்

மீண்டும் கடந்த சில நாட்களாகவே ஆத்துவோரம் பிரச்சனை கசிய ஆரம்பித்துள்ளது. இது நாள் வரைக்கும் பேரூராட்சியால் வாங்க பட்டு வந்த வீட்டு வரி தற்போது வாங்க மறுக்கின்றார்கள். தண்ணி பில் மட்டும் கட்டுங்கள் என நிர்பந்திக்கின்றார்கள். இது சம்மந்தமாக பேரூராட்சியில் போய் விசாரித்தால் இங்கு உள்ள ஊழியர்கள் பேரூராட்சி தலைவர் பேரூராட்சிக்கு வந்தே பல நாட்கள் ஆகின்றது என புலம்புகின்றனர். இது தான் நாம் ஆசை ஆசையாக நமது ஜமாத் கூறுகின்றது என ஓட்டு போட்ட லட்சனம்.

சரி ஏன் வீட்டு வரி வாங்க மாட்டேங்குராங்க என நாம் விசாரித்த வகையில் எங்களுக்கு (பேரூராட்சிக்கு) நீதி மன்றத்தில் இருந்து ஆனை வந்துள்ளது. இந்த (ஆத்துவோரம் உள்ள) பகுதியில் உள்ளவர்களிடம் வரி வாங்க கூடாது என்று என கூறுகிறார்கள்.

சரி அந்த ஆனையை காமிங்க என கூறினா அது வெல்லாம் காமிக்க கூடாது என மலுப்புகின்றனர். சரி காமிக்க வேண்டாம். அறிவிப்பு பலகையிலாவது ஒட்டலாம் என கூறினால் அதற்கும் சரியான பதில் இல்லை.

இதை பற்றி பல முறை மேற்கு ஜமாத் நிர்வாகியிடம் கூறினாலும் அவர்களும் தகுந்த முறையில் பேரூராட்சி தலைவரை விசாரிக்கின்ற மாதிரி தெரியவில்லை.

ஆக மொத்ததில் அங்கு உள்ள நமது மக்கள் இளிச்சவாயர்கள் என நினைத்து கொண்ட உள்ளனர் இவர்கள். 

குறிப்பு : கடைசியாக வந்த தகவலின் அடிப்படையில் நிர்வாகிகள் நாங்கள் பேரூராட்சி து.தலைவரிடம் கூறி உள்ளோம் இனி அவர் வரி வாங்குவார் என கூறினார்கள். ஆனால் இதை பற்றி செயல் அலுவலர் அவர்களிடம் கேட்டால் அவர் தலைவர் இது வரைக்கும் என்னிடம் வரி வாங்குவதை பற்றி எதுவும் கூறவில்லை என தெரிவித்தார். 

இன்னொறு முக்கிய மான விசயம் என்னவெனில் இந்த செய்தியை நாங்கள் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே வெளியிட்டு இருப்போம். ஏன் வெளியிட வில்லை எனெனில் நமது நிர்வாகிகள் இது சம்மந்தமாக தலைவரிடம் பேசுவார்கள் என நாங்கள் நம்பியிருந்தோம். இது வரைக்கும் ஒரு ஆரோக்கியமான செய்திகள் வர வில்லை. இதுவும் ஒரு மனகசப்போடுதான் வெளியிடுகின்றோம்.

நமது நிருபர் 


5 கருத்துகள்:

  1. Dear Brothers and Relatives Riyadh, KSA.
    19/06/2014.
    Assalaamu Alaikkum(Varah..)
    Please be patience and give some time to read my request/suggestion fully.
    I am writing with regards of every citizen in our (Town Panchayat) Perooraatchi. I assume the below will be on everyone’s mind/heart.
    Labbaikudikadu having all kind of political parties and the village well known by the leading political leaders (particularly, if you mentioned about our village "they knew about our unity which is not limited but will be made 100% after finalizing the land issue”). Why this issue is not discussed by the candidates whoever asking vote from us? Should be the answer by everyone will be “after the election we will discuss with our higher level committee and will be sorted out later”.
    We heard these kind of promises many more times. No one stand on their promises. Generation by generation we are facing the same problem. May be or must be we are going to present the same issue to our next generation. Is not possible to discuss and make a solution with the current party (AIADMK)? If it will not sorted out we have to boycott all of the elections (local, state and central).
    We will promise our unity to one (must be truly to one party after getting their conformation) at once by voting to the party for the oncoming election, if it will not happen after the election we will totally boycott all of the elections after onwards or is it not possible legally to hand over our ration card to GOVT. to resolve this issue? (Example: same happened in a film “citizen”).
    Dear brothers, I am not having that much knowledge in law/civil issues. Please discuss with any of our community lawyer. We are tired and disappointed by hearing the promises by all kind of political parties in Tamilnadu through our village representatives regarding this issue.
    I submitted my feelings (agony) and suggestion. Please anyone or group take some necessary steps and I am always happy to part of your any step.
    Unity is our strength our Allah and our Prophet Muhammed (SAW) always mentioned/ordered it must be (in this issue no jamat or any political separation all should be as one to solve).
    Zhazhakallah khairan

    Best Regards
    Haji Dhastagir.
    East Main Road (Near Dr. Dinakaran house)
    Labbaikudikadu.
    Note: I don’t have any issue on my house or land, each inch of my house followed as per the law even though I could understand our brother’s problem whoever trapped in this issue.

    பதிலளிநீக்கு
  2. இந்த விசயத்தில் நமதூர் அரசியல் கட்சிகள் தனது விளையாட்டை நிருத்தினால் வெற்றி நிச்சயம்..

    பதிலளிநீக்கு
  3. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமதுல்லாஹி வபரகாதுஹூ, அல்லாஹ்வின் சாந்தியும்,சமாதானமும் நமதூர் மக்கள் அனைவரின் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக என்ற பிராத்தித்தவனாக, சகோதரர் ஹாஜி தஸ்தகீர் அவர்கள் நமதூரின் நிலையை வருத்தத்தோடு பதிவு செய்திருக்கிறார்.(சகோதரருக்கு ஒரு சிறிய வேண்டுகோள், முடிந்தவரை உங்கள் கருத்துக்களை தமிழில் எழுதுங்கள். தெரியவில்லை என்றால் முயற்சி செய்யுங்கள். உலக கல்விக்காக எத்தனையோ விஷயங்களை பெருமுயற்சி எடுத்து கற்றுக்கொள்ளும் நாம் நம் தாய் மொழியில் சில வரிகள் தட்டச்சு செய்ய தெரியாதது மிக்க வருந்ததக்கது.(மென் பொருள் NHM WRITER(TAMIL)).மன்னிக்கவும் ,இனி விஷயத்திற்கு வருவோம். நமதூரின் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் நம் மக்களே. நமக்கு எதிரிகள் வெளியில் இல்லை. நம்மில்தான் இருக்கிறார்கள். உங்கள் கருத்துபடி ஒரு தேர்தலைக்கூட நம்மால் புறக்கணிப்பு செய்யமுடியாது. காரணம் நமதூரில் உள்ள 2 டஜன் அரசியல் கட்சிகளின் அல்லக்கைகள்தான். இதற்கு ஒரே தீர்வு பொது மக்களின் ஒற்றுமையான போராட்டம் மற்றுமே. ஜமாத்துகளை நம்பிக்கொண்டிருந்தால் எந்த பிரச்சினையும் தீரப்போவதில்லை. தீர்ப்பதை அவர்கள் விரும்புவதும் இல்லை. மேலும் அதிக விபரங்களுக்கு இந்த வலை தளத்தில் 1 அல்லது 1.5 வருடங்களுக்கு முன்பு நான் பதிவு செய்த தீர்வை நோக்கி பாகம்-1 என்ற கட்டுரையை படிக்கவும். (இணைய தள குழுமத்திற்கு சிறிய வேண்டுகோள். அந்த கட்டுரையை முடிந்தால் மீண்டும் இடவும். அதோடு இந்த இணையத்தின் வாயிலாக நம் ஊர் நலனில் உண்மையான அக்கரையும், கவலையும் உள்ள ஹாஜி தஸ்தகீர் போன்ற சகோதரர்களை ஒன்றினைத்து ஒரு குழுவை ஏற்படுத்த முயற்சி செய்யுங்கள். என்னால் முடிந்த உதவிகளை செய்ய நான் தயார். பேஸ் புக்கில் எது எதற்கோ லைக் கொடுக்கும் நமதூர் சகோதரர்களே இது போன்ற முயற்சிகளுக்கு உங்கள் ஆதரவையும் ஆலோசனைகளையும் மன்முவந்து வழங்குங்கள். நமதூர் பிரச்சினைகள் தீர விரும்பும் சகோதரர்கள் இந்த தளத்திலேயே இதை படித்த பிறகே உங்கள் முயற்சியை தொடங்கலாமே. பார்ப்போம். ஜஜாகுமுல்லாஹ் ஹைரன். அல்லாஹ் நம் முயற்சிகளுக்கு வெற்றி அளிக்க பிராத்தித்தவனாக,

    எ. ரபி அஹமத்,
    துபை.
    அலைபேசி- 055-9105169.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

      சகோதரர் ரபி பாய் அவர்களே,

      நிச்சயம் தமிழில் எழுத முயற்சிக்கிறேன்.

      என் மடலில்/ஆதங்கத்தில் நான் குறிப்பிட்டது போல், ஏதேனும் ஒரு வக்கீல்(நம் மார்க்கத்தை சேர்ந்தவரை) கலந்து ஆலோசிக்க முடியுமா? சட்டப்படி இதற்கு ஏதும் செய்யமுடியாதா?

      நிச்சயமாக தாங்களோ அல்லது எவரேனும் எடுக்கும் எந்த ஒரு முயற்சிக்கும் என்னால் முடிந்த பங்களிப்பையும் உதவிகளையும் தர தயாராய் இருக்கிறேன்.

      என் ஊர்வாழ் சகோதரர்களே, சொந்தங்களே, இன்றைக்கு வேறொருவருக்கு இருக்கும் சட்டப்பிரச்சனை, நமக்கு வேறுவிதத்தில் வரும்(வருமான வரி, வீடு கட்டிய கணக்கு என்று நோண்ட ஆரம்பித்துவிடுவார்கள்). ஒற்றுமையாய் இருந்து , கட்சி, ஜமாத் பாகுபாடுகள் நீங்கி ஒன்றுபட்டு வழிகாண முயற்சிப்போம்.

      அல்லாஹ்வே எல்லாவற்றுக்கும் போதுமானவன்.
      யாஅல்லாஹ் எம் மக்களை, எங்களை ஒற்றுமை கொண்டு பலப்படுத்துவாயாக!
      எங்களிடையே உள்ள காழ்புணர்சிகளை நீக்குவாயாக!
      எங்களை சோகத்தில் ஆழ்த்த நினைக்கும்,எங்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கும் சதிகாரர்களை நீ கேவலப்படுத்துவாயாக!
      உன் அருள்கொண்டு எங்களுக்கு வெற்றியை வழங்குவாயாக!

      ஆமீன்!

      நட்புடனும்
      அக்கறையுடனும்

      சகோதரன்

      ஹாஜி தஸ்தகீர்.

      நீக்கு
    2. வ அலைக்கும் அஸ்ஸலாம், முதலில் உங்கள் பதிவை விரைவாக அழகிய நம் தமிழில் பதிவு செய்தமைக்கு நன்றி. ஜஜாகுமுல்லாஹ் ஹைரன். உங்கள் மொபைல் நம்பரையும் மெயில் ஐடியையும் என்னுயை மொபைல் நம்பருக்கு முடிந்தால் எஸ் எம் எஸ் செய்யவும். நீங்கள் குறிப்பிட்டதை போல் நம் ஊரின் அனைத்து பிரச்சினைகளும் நாட்கள் செல்ல செல்ல இன்னும் சிக்கல் அதிகமாகி கொண்டேதான் செல்லும். ஆத்துக்கொல்லை பிரச்சினை மாத்திரம் அல்ல. ஜமாலி நகர் ப்ட்டா பிரச்சினை,பாதாள சாக்கடை திட்டம், நம் ஊர் பெயரை கெஜட்டில் பதிய வைத்தல், பேருந்து நிலைய பிரச்சினை என பல்வேறு சிக்கல்களில் நம் ஊர் சிக்கி தவிக்கின்றது. நீங்கள் குறிப்பிட்டதை போல வக்கீல் வைத்து வழக்கு பதிவு செய்து சட்ட ரீதியான போராட்டத்தை தொடங்கலாம்.ஆனால் அது மட்டும் போதாது. மக்கள் போராட்டம்,ஆளும் கட்சி மூலம் அந்த கட்சி பிரமுகர்கள் அழுத்தம் கொடுத்தல்,பல்வேறு ஜமாத்களின் (டிண்டிஜே,தமுமுக,எஸ்.டி.பி.ஐ,ஐக்கிய ஜமாத் பேரவை)போராட்டங்கள் என் பல முனை போராட்டங்களினால் மட்டுமே நாம் வெற்றி பெற முடியும். இதற்கு முதலில் அரசியல் ,ஜமாத்,இயக்கங்களுக்கு அப்பாற் பட்டு ஊர் நலனில் அக்கரை உள்ளவர்களின் குழு உருவாக்கப்பட வேண்டும்.அதற்கு செயல் திட்டம்,பொருளாதார உதவிகள், விடா முயற்சிக்கான பயிற்சி வழங்கப்பட வேண்டும்.உலகம் முழுதும் பரவி உள்ள நம் ஊர் மக்கள் தங்களால் முடிந்த உதவிகளை(பொருளாதாரம்,செயல் திட்டம்,யோசனைகள்,ஆதரவுகள்,அரசாங்க அலுவல்களின் அணுமுறைகள் என)வழங்குவார்களேயானால் இன்ஷா அல்லாஹ் வரும் சட்ட மன்ற தேர்தலுக்கு(2016)முன்பாகவே 40 வருடங்களாக தொடர்ந்து வரும் எல்லா பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து விடலாம். நம் முயற்சிகளுக்கு அல்லாஹ் போதுமானவன்.

      நட்புடனும் அதிக அக்கறையுடனும்,
      சகோதரன் எ.ரபி அஹமத்,

      நீக்கு