சென்னை: என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான கலந்தாய்விற்கான ரேண்டம் எண்ணை அண்ணா பல்கலைக் கழகம்வெளியிட்டுள்ளது. பி.இ, பி.டெக், படிப்புகளுக்கான ரேண்டம் எண்ணை தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் வெளியிட்டார். ரேண்டம் எண்ணை அண்ணா பல்கலைக்கழகத்தின் WWW.ANNAUNIV.EDU என்ற இணைய தளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். இரண்டு மாணவர்கள் ஒரே கட் ஆஃப் மதிப்பெண் பெற்றிருந்தால் அவர்களை வரிசைப்படுத்த முதலில் கணிதம், இயற்பியல், வேதியியல், நான்காம் விருப்பப்பாடம் ஆகியவற்றில் மாணவர்கள் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் பார்க்கப்படும். அதிலும் ஒரே மதிப்பெண் பெற்றிருந்தால் பிறந்த தேதி பார்க்கப்படும். அதுவும் ஒன்றாக இருந்தால் இந்த ரேண்டம் எண்ணைப் பயன்படுத்தி மாணவர்கள் வரிசைப்படுத்தப்படுவர். வரும் ஜூன் 27ஆம் தேதி பொதுப் பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு தொடங்குகிறது. சிறப்புப் பிரிவினருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 13 ஆம் தேதி தொடங்கும் என்றும், சிறப்புப் பிரிவினருக்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 17ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுப்பிரிவினருக்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 16 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும், கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்கள் குறித்து விவரங்களும் அன்றைக்கே தெரிய வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தொழிற் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 9 ஆம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி தமிழ்ஒன்இந்தியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக