எல்லாம் வல்ல
அல்லாஹ்வின் பெயரால் துவங்குகிறேன்.
இந்த நூற்றாண்டின் மாபெரும் பித் அத்
அஸ்ஸலாமு
அலைக்கும் ( வரஹ்.)
சகோதர சகோதிரிகளே,
இந்த நூற்றாண்டின் மாபெரும் பித் அத் பற்றி எழுதுமுன், பித் அத் என்றால் என்ன என்று பார்ப்போம். பித் அத் என்றால்
எது குர்
ஆனிலோ , நபி (ஸல்) அவர்களோ நமக்கு காட்டித் தராத புதிய ஒன்று
அமல்படுத்தப்படுமானால் , அது 100 % பித் அத்தான், வழிகேடுதான். ஹதீஸ்படி
நரகில்தான் கொண்டு போய் சேர்க்கும்.ஜக்காத் ஒரு பொருளுக்கு ஒரு முறை போதும் என்பது
மாபெரும் பித் அத்.
ஹதீஸ் அறிவிப்பாளர் வரிசையும் இல்லாத , ஷகாபாக்கள்
காலம் நபி (ஸல்) அவர்களிடம் இருந்து நேரடியாக
கேட்டு அமல் செய்தவர்கள், அதன் பிறகுதான் அறிவிப்பாளர்கள் வரிசையே
தொடங்குகிறது. ஒட்டு மொத்த ஷகாபாக்களின் அமல் வருடா வருடம் ஜகாத்
கொடுத்தே உள்ளனர். என்றால் நபி(ஸல்) காலத்திலும் அதுதான்
நடைமுறையில் இருந்துள்ளது என்பதற்கு இதை விட வேறு சான்று தேவையில்லை.
எந்த ஹதீஸ் விரிவுரையாளர்களும் இப்படி ஒரு கருத்தை தெரிவிக்காதது
மட்டுமல்ல , ஒவ்வொரு வருடமும் கொடுத்து நடைமுறைபடுத்தி இந்த ஹதீஸ்களின் நம்பகத்தன்மைக்கு
வலு சேர்க்கின்றனர்.
“ குல்லும் ஆமின்
“ “ஒவ்வொரு வருடமும்” என்று ஹதீஸில் ஜகாத் தர வேண்டும்
என்று தெளிவாக உள்ளதை காட்டிய பின்புதான் இப்படி ஒரு ஹதீஸ் உள்ளதே இவர்களுக்கு தெரிய
வருகின்றது எனில், இவர்களுடைய ஹதீஸ் புலமை , மார்க்க விஷயத்தில் அலட்சியம், அல்லாஹ்வுடைய அச்சமற்ற
தன்மை, தெளிவாக தெரிகின்றது.
நபி ( ஸல் ) அவர்கள் தெளிவான ஹதீஸ் இருக்கின்றது, அதை ஷகாபாக்கள் ,. கலீபாக்கள், இமாம்கள், தங்கள் வாழ்வை ஹதீஸுக்கு என்றே அர்பணித்த ஹதீஸ்
கலை வல்லுநர்கள் , 1400 ஆண்டுகால இஸ்லாமிய சமுதாயம்
பின்பற்றி தெளிவான ஆதாரத்திற்கு மேலும் வலு சேர்க்கின்றனர். இதற்கு
மாற்றமாக 1400 ஆண்டுகாலத்தில் எந்த ஒரு பைத்தியக்காரணும் கூட
இப்படி உளரவில்லை.
எனவே ஹதீஸை பலவீனபடுத்தும்
இவர்களின் முயற்சி தவிடுபொடியாகின்றது.
ஜகாத் என்ற மிக முக்கிய கடமையை நபித் தோழர்கள் காலம்
தொட்டு இன்றுவரை தவறாகவே புரிந்து செயல்படுத்தியுள்ளார்கள் என்று சொல்ல
வருகிறார்களா..?
நபித்தோழர்களின் கருத்துக்கு மாற்றமாக ஒரு ஆதாரம்
கிடைக்கும் போதுதான் நபித்தோழர்களின் கருத்தை விட ஆதாரமே முக்கியம் என்ற
முடிவுக்கு நாம் வருவோம். ஜகாத் விஷயத்தில் நபித்தோழர்களின் கருத்தை பின்பற்றக்
கூடாது என்றால் அவர்களின் கருத்துக்கு எதிரான ஆதாரம் எங்கே?? எங்கே???
தெளிவான
ஆதாரம் இல்லாத நிலையில் நபித்தோழர்களின் கருத்தை விட எங்கள் ஆய்வே சிறந்தது என்று
சொல்ல வருகிறார்களா..?
ஷகாபாக்கள் அனைவரும் வழி தவறியவர்கள்
எனில் உங்களுக்கு நேர் வழி கொடுத்தது யார் ?
ஷகாபாக்கள் கலீபாக்கள் இமாம்கள் ஹதீஸ் கலை வல்லுநர்கள் 1400 ஆண்டு கால இஸ்லாமிய சமுதாயம்
வழி தவறியது எனில் உங்களுக்கு இஸ்லாம் வந்தது எப்படி?
தனிப்பட்ட ஒரு மனிதனையா பின்பற்றுகின்றீர்கள் ? உங்களுக்கு
என்ன நேர்ந்தது, எப்படி இதை நியாயம் கற்பிக்கின்றீர்கள்?
எப்படி உங்கள் மனசாட்சி உங்களுக்கு நிம்மதியளிக்கின்றது.
“
பித் அத் எல்லாம் வழிகேடு , வழிகேடு எல்லாம்
நரகில் கொண்டு போய் சேர்க்கும்.”
மின்னஞ்சல் மூலமாக
Basha mohideen
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக