Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 18 ஜூன், 2014

கார்லி பியோர்னியா (Carly Fiorina ) - முன்னாள் சி,இ.ஓ (Hewlett – Packard (HP)) இஸ்லாத்தை பற்றி கூறிய வரிகள்..


கார்லி பியோர்னியா (Carly Fiorina ) - முன்னாள் சி,இ.ஓ (Hewlett – Packard (HP)) இஸ்லாத்தை பற்றி கூறிய வரிகள்.. 


“உலகில் உன்னதமான (greatest) ஒரு நாகரிகம் இருந்திருக்கிறது. ஒரு சமுத்திரக்கரையிலிருந்து இன்னொரு சமுத்திரக்கரைவரை, வடக்கின் குளிர்ப் பிரதேசம் முதல் சுட்டெரிக்கும் வெப்பப் பிரதேசப் பாலைவனங்கள் வரை நீண்டு பரந்து கிடந்த நிலப் பரப்புகளைக் கொண்ட - பல தேசங்களை உள்ளடக்கிய - ஒரு சாம்ராஜ்யத்தை அந்த நாகரீகத்தால் உருவாக்க முடிந்திருக்கிறது. கோடிக்கணக்கான மக்கள், பல சமயத்தவர்கள், பல்வேறு இன குழுக்களைச் சார்ந்தவர்கள் இதன்கீழ் வாழ்ந்திருக்கிறார்கள்.

இந்த நாகரிகத்தின் மொழிகளுள் ஒன்று உலகப் பெரும்பான்மையின் பொதுமொழியாக நூறு நிலங்களில் வாழ்ந்த மக்களை இணைத்திருந்தது. பல தேசத்தவர்களைக் கொண்ட இதன் சிப்பாய்களும் இந்த நாகரிகம் அளித்த ராணுவப் பாதுகாப்பும் செழிப்பும் மனித குலத்திற்கு இதற்கு முன் தெரிந்திராதவை. இதன் வணிகத்தொடர்புகள் இலத்தீன் அமெரிக்காவிலிருந்து சீனாவரையிலும் மற்றும் அதற்குட்பட்ட மொத்த நிலப்பரப்புகளிலும் வியாபித்திருந்தது.

எல்லாவற்றையும்விட, புதிய கண்டுபிடிப்புகளால் முன்னேறிக் கொண்டிருந்த நாகரிகம் அது. புவிஈர்ப்பு விசையை மீறிய கட்டடங்களை இதன் கட்டடவியலாளர்கள் வடிவமைத்துக் கொண்டிருந்தார்கள். கணிதவியலாளர்கள், பின்னால் வடிவமைக்கப் படவிருக்கும் கணிப் பொறிகளுக்கும் தரவு மறையாக்கத்திற்கும் (Data Encryption) உதவப்போகும் அல்ஜிப்ரா மற்றும் கணித வழிமுறைகளைக் (Algorithms) கண்டுபிடித்திருந்தார்கள். மருத்துவர்கள் மனித உடல்களை ஆராய்ந்து தீரா நோய்களுக்குப் புதிய மருந்து கண்டுபிடித்திருந்தார்கள். 

விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் புதிய நட்சத்திரங்களுக்குப் பெயரிட்டுக்கொண்டும் பின்னாட்களில் நடக்கவிருக்கும் விண்வெளிப் பயணங்களுக்கும் ஆய்வுகளுக்கும் வழிகோலிக் கொண்டிருந்தனர். எழுத்தாளர்கள் ஆயிரக்கணக்கான புதினங்கள் எழுதிக் குவித்தனர். கவிஞர்கள் அன்பைப் பாடுபொருளாக்கிக் கவிதை புனைந்தார்கள். 

மற்ற சமூகங்கள் சிந்திக்க அச்சமுற்று இருந்த வேளையில் இந்த நாகரிகம் புதிய சிந்தனைகளில் தன்னைத் திடமாக வளர்த்துக் கொண்டு முன்னேறிச் சென்று கொண்டிருந்தது. கட்டுப்பாடுகள் அறிவை அழிப்பதற்காக அச்சுறுத்திக் கொண்டிருந்த வேளையில் இச்சமூகம் அறிவை வாழவைத்து அது பிறருக்குக் கிடைக்கும்படி கைமாற்றிக் கொண்டிருந்தது. 

தற்கால மேற்குலக நாகரிகம் வரித்துக் கொண்டிருக்கும் அம்சங்களைக் கொண்ட இந்த நாகரிகம்தான் கி.பி 800லிருந்து 1600 வரை உதுமானியப் பேரரசும் பக்தாத் அரசவையும் டமாஸ்கஸ் கெய்ரோ மற்றும், அறிவிலும் ஆன்மீகத்திலும் ஒப்பில்லாத சுலைமான் (Suleyman The Magnificient) போன்ற ஆட்சியாளர்கள் ஆட்சி செய்த இஸ்லாமிய உலகம் கண்ட நாகரிகமாகும்.

இந்த நாகரிகத்திற்கு நாம் கடன்பட்டிருப்பதை அறிந்திருக்காவிட்டாலும் அது நமது பாரம்பரியத்திற்கு அளித்த கொடைகள் மிகப் பெரியது. அன்றைய அரபுக் கணிதவியலாளர்களின் பங்களிப்பில்லாமல் இன்றைய தொழில்நுட்ப உலகம் இத்துணை விரிவடைந்திருப்பது சாத்தியமில்லை.

1 கருத்து: