புகை பொருட்கள் மீது பெருமளவு வரி விதிக்குமாறு உலக சுகாதார ஸ்தாபனம் உலக நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதன் மூலம் புகை பிடிப்போரின் எண்ணிக்கையை பெருமளவில் குறைக்க முடியும் என்றும் சுகாதார சேவைகளுக்கான வருமானத்தை அதிகரிக்க முடியும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
புகைத்தல் எதிர்ப்பு தினத்தை அடையாளப்படுத்தும் உலக சுகாதார ஸ்தாபனம் சிகரெட்டுகள் மீதான வரியை 50 வீதமாக உயர்த்த வேண்டும் என்றும் கோரியுள்ளது.
அதேநேரம், சிறிதளவு வரி அதிகரிப்பு கூட பெரியளவு மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. புகைத்தல் காரணமாக ஒவ்வொரு 6 செகன்டுக்கும் ஒருவர் உயிரிழப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் கூறுகின்றது.
நன்றி தூது ஆன்லைன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக