வரலாற்று வெளிச்சத்தில் ரமளான்
உலக மக்களின் வாழ்வியல் வசந்தமான புனிதக் குர்ஆன் இந்த
ரமளான் மாதத்தில் தான் இறக்கியருளப்பட்டது. ஹிஜ்ரி 1 , ரமளான் (கி.பி.623 மார்ச்) மாதம்
ஒரு படைப் பிரிவை நபி (ஸல்) அவர்கள் ஹம்ஸா (ரழி) அவர்களின் தலைமையில் 30 பேர்கொண்ட
படையை “ ஸய்ஃபுல் பஹ்ர் ” எனும் இடத்திற்கு குறைஷிகளின் வியாபாரக் குழுவை வழி மறிப்பதற்காக
அனுப்பி வைத்தார்கள்.
இப்போரில் நபி (ஸல்) ஹம்ஸாவுக்கு வெள்ளை நிறக் கொடி கொடுத்தார்கள்.
இதுதான் நபி (ஸல்) அவர்கள் நிறுவிய முதல் கொடியாகும். இக்கொடியை அபூ மர்ஸத் கன்னால்
இப்னு ஹூஸைன் அல்கனவி (ரழி) ஏந்தியிருந்தார்கள். இரு கூட்டதினருக்கு நண்பராக இருந்த
மஜ்தி இப்னு அம்ர் அல்ஜூ ஹனி என்பவர் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி போரைத் தவிர்க்கச்
செய்தார்.
1. ஹிஜ்ரி 2ம் ஆண்டு ரமளான் 17ம் நாள் பத்ரு யுத்தம் நடந்தது.
2. ஹிஜ்ரி 2ம் ஆண்டு ரமளான் 10ம் நாள் தான் ஜகாத்துல் ஃபித்ர்
கடமையாக்கப்பட்டது.
3. ஹிஜ்ரி 6ஆம் ஆண்டு ரமளான் மாதத்தில் இஸ்லாத்திற்கும்
முஸ்லிம்களுக்கும் கடும் விரோதியாக இருந்த ஃபாத்திமா பின்த் ரபீஆ என்ற பெண்மணி வாதில்
குரா என்ற போரின்போது ஸைத் பின் ஹாரிஸா தலைமையிலான படையினரால் கொல்லப்பட்டார்.
4. ஹிஜ்ரி 5ஆம் ஆண்டு நடைபெற்ற அஹ்ஸாப் யுத்ததிற்கான ஏற்பாடுகள்
ரமளான் 9ம் நாள் மேற்கொள்ளப்பட்டது.
5. ஹிஜ்ரி 8ம் வருடம் பத்ஹூ மக்கா எனப்படும் மக்கா வெற்றி
ரமளான் 7ம் நாள் நடைபெற்றது.மக்கா வெற்றிக்கொள்ளப்பட்ட அதே ஆண்டு ரமளான் மாதத்தில்தான்
ஹிஜாஸ் மாகாணத்தின் இணைவைப்பின் கடைசி அடையாளத்தையும் துடைத்தெறிய காலித் பின் வலீத்
(ரலி) அவர்கள் தலைமையிலான 30 பேர்கள் கொண்ட படையை நக்லா என்ற இடத்திலுள்ள உஸ்ஸா என்ற
சிலையைத்தகர்ப்பதற்கும் அம்ரு பின் (ரலி) தலைமையிலான படையினரை ருஹாத் என்ற இடத்திலுள்ள
சுவா என்ற சிலையைத்தகர்ப்பதற்கும் ஸஅத் பின் ஸைத் அஸ்அலி (ரலி) அவர்கள் தலைமையிலான
20 பேர் கொண்ட படையினரை முஷல்லல் என்ற இடத்திலுள்ள மனாத் என்ற சிலையை தகர்ப்பதற்கும்
நபி (ஸல்) அவர்கள் அனுப்பிவைத்தார்கள்.
6. நபி (ஸல்) அவர்கள் ஸவ்தா (ரலி) அவர்களை திருமண முடித்தது
ரமளான் மாதத்தில்.
7. ரமளான் 21ல் தபூக் யுத்தம் நடைபெற்றது.ரோமர்களுடன் நடந்த
போரில் முஸ்லிம்கள் வெற்றி பெற்றனர்.
8. ஹிஜ்ரி 9ம் வருடம் ரமளான் 8ல் ஹிம்யர் கோத்திரத்துக்காரர்கள்
இஸ்லாத்தைத் தழுவினார்கள்.
9. ஹிஜ்ரி 40ம் வருடம் ரமளான் 10ல் அலி (ரலி) அவர்கள்,
கவாரிஜ்களால் கொல்லப்பட்டார்கள்.
10. ஹிஜ்ரி 51ம் வருடம் ரமளானில் முஆவியா (ரலி) அவர்களின்
ஆட்சிகாலத்தில் ஜூனாத் பின் அபி உமைய்யா தலைமையில் கிறிஸ்தவர்கள் வசித்து வந்த ரோடஸ்
தீவைக் கைப்பற்றினார்கள்.
11. ஹிஜ்ரி 57ம் வருடம் ரமளான் 10ல் ஆயிஷா (ரலி) அவர்கள்
மரணமடைந்தார்கள்.
12. உமையா கலீஃபா வலீதின் காலத்தில் முஸ்லிம்கள் ஸ்பெயினை
வெற்றி கொண்டது, ஹிஜ்ரி 91, ரமளான் 19ல் ஆகும். இப்படையெடுப்பின் போது தாரிக் பின்
ஸியாத் (ரஹ்) அவர்கள் ஸ்பெயின் எல்லையை அடைந்த பின் தான் வந்த கப்பலைத் தீயிட்டுக்
கொளுத்தி விட்டு, வெற்றி அல்லது வீர மரணம் என்று சூளுரைத்துக் களம் புகுந்தார்.
13. ஹிஜ்ரி 112ம் வருடம் ரமளான் மாதத்தில் பஸ்ரா, குராஸான்,
ஸாஜிஸ்தான் ஆகிய பகுதிகளை ஆட்சி புரிந்த தீரமும் துணிச்சலுமிக்கவரான அபூ உக்ரா அல்
ஜர்ராஹ் ஷஹீதாக்கப்பட்டார்கள்.
14. ஹிஜ்ரி 524 ரமளான் 29ல் தான் சுல்தான் ஸலாஹூத்தீன்
அய்யூபி சிலுவை யுத்தங்களில் ஒன்றான ஹத்தீன் போரில் கிறிதவர்களைத் தோற்கடித்து வெற்றி
பெற்றார்.
15. ஜன்ஜலூத் என்ற இடத்தில் நடைபெற்ற யுத்தத்தில் வெல்ல
முடியாது என்ற கூறப்பட்ட தார்த்தாரியர்களை ஹிஜ்ரி 658 ஆம் ஆண்டு எகிப்திய சுல்தான்
குத்ஸ் இப்னு அப்துல்லாஹ் அல் மாஸி தலைமையில் முஸ்லிம்கள் தோற்கடித்தது இந்த ரமளானில்
தான்.
16. ஹிஜ்ரி 1094 ரமளான் மாதம் 20 ஆம் நாள் உத்மானியப்பேரரசின்
படைகள் வியன்னாவில் படையினரின் பலஹீனத்தின் காரணமாக தோற்கடிக்கப்பட்ட சோக வரலாறு நிகழ்ந்தது.
17. ஹிஜ்ரி 1414 ஆம் ஆண்டு ரமளான் மாதம் 15ல் ஃபலஸ்தீனிலுள்ள இப்ராஹீம் மஸ்ஜிதில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஃபஜ்ர் தொழுகையைத் தொழுதுகொண்டிருந்த முஸ்லிம்கள் மீது யூத சியோனிஸ வெறியன் பருச் கோல்டுஸ்டீன் தலைமையிலான யூத வெறியர்கள் நடத்திய வெறியாட்டத்தில் 90 பேர் ஷஹீதாக்கப்பட்டனர். 270 பேர் காயமடைந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக