Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 21 ஜூன், 2014

இஸ்லாத்தை தழுவிய நமது சகோதரர் விபத்தில் சிக்கி இரண்டு கால்களும் நசுங்கிய நிலையில் தவிக்கும் அவருக்கு மருத்துவ உதவி தேவை !

வி களத்துரை சேர்ந்த சுரேஷ் என்பவர் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு ஏலேக்ட்ரிசியன் முபாரக் பாய் அவர்களின் முயற்சியால் இஸ்லாம் மார்க்கத்தை தழுவினார் தனது பெயரை முஹம்மது ரபீக் என மாற்றிகொண்டார்

இவர் விகளத்தூர் டாஸ்மார்க்கில் வேலை பார்த்தார் இஸ்லாத்தை தழுவிய பிறகு டாஸ்மார்க் வேலை ஹராமென்று விளங்கி கொண்டு தனது வேலையை உதறி தள்ளினார்.
விகளத்தூரில் இஸ்லாம் மார்க்கத்தை சேர்ந்த விதவை பெண்மணியை இரண்டாம் தாரமாக மணம்முடித்து முதல் தாரத்தில் பிறந்த இரண்டு குழந்தைகளுடன் ஆத்தூரில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் ஆத்தூரில் நடந்த விபத்தில் அவருடைய இரண்டு கால்களும் நசுங்கியது அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக
சேர்க்கப்பட்டது சிகிச்சையில் எந்த முன்னேற்றமும் இல்லாததனால் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள MIOT மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டது

ஒரு கால் முற்றிலும் நசுங்கியதால் அந்த கால் அகற்றப்பட்டது மற்றொரு கால் சிகிச்சை செய்ய சுமார் 10 லட்சம் ஆகுமென டாக்டர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் இஸ்லாத்தை தழுவிய நமது சகோதரர்க்கு மேல் மருத்துவ சிகிச்சை செய்ய அவர்களுக்கு  வசதி இல்லாததனால் உங்களால் முடிந்த உதவிகளை செய்யுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம் –

தொடர்புக்கு

நூரி (சுரேஷ் [எ ] ரபீக் மனைவி ) : 80 98 98 18 11
விகளத்தூர் ஏலேக்ட்ரிசியன் முபாரக் : 99 43 88 28 93

மின்னஞ்சல் மூலமாக 
முஹம்மது சுல்தான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக