வாஷிங்டன்: ‘இந்தியா – அமெரிக்கா அணு ஒப்பந்தத்தை செயல்படுத்த, இன்னும் சில அம்சங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்’ என, அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் சமீபத்தில் இந்தியா வந்திருந்த, அமெரிக்க தேசிய கவுன்சிலின் தெற்காசிய இயக்குனர்களில் ஒருவரான பில் ரெய்னர், இந்தியா – அமெரிக்கா அணு ஒப்பந்தத்தை செயல்படுத்த, இன்னும் சில அம்சங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என கூறினார்.
மேலும் அவர், ”விபத்து ஏற்பட்டால் காப்பீடு வழங்குவது குறித்து, காப்பீடு நிறுவனங்கள் அமைப்பது தொடர்பாக, இரு நாடுகள் மற்றும் காப்பீடு நிறுவனங்களுக்கு இடையே பேச்சு நடந்து, இறுதி முடிவு எடுக்கப்பட்ட பின், ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வரும்,” என்றார்.
அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால் இழப்பீடு வழங்க, 1,500 கோடி ரூபாய் காப்பீடு நிதியம் ஏற்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான நிதியில் பாதியை வழங்கவும் முன்வந்துள்ளது. காப்பீடு பிரீமிய தொகையை, இந்திய அணுசக்தி கழகம் வழங்கும். அது போன்ற மற்றொரு காப்பீட்டை, அணு உலைகளை வழங்கும் அமெரிக்க நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும் என, இருநாடுகளுக்கும் இடையே பேசி முடிவாகி உள்ளது.
நன்றி தூது ஆன்லைன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக