Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 21 பிப்ரவரி, 2015

நமதூர் அருகே நகை பாலீஸ் போடுவதாக கூறி 5 பவுன் நகை மோசடி ...

லப்பைகுடிகாடு அருகே உள்ள திருமாந்துறை கிராமத்தை சேர்ந்தவர் தியாகராஜன். இவருடைய மனைவி சம்பூரணம். இவரும், இவருடைய உறவினர் சுதாவும் நேற்று வீட்டில் இருந்தனர்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் பாத்திரத்திற்கு பாலீஷ் போட்டு தருவதாக கூறினர். உடனே சம்பூரணம் வீட்டில் இருந்த பித்தளை பாத்திரத்தை பாலீஷ் போட கொடுத்தார். அதற்கு பாலீஷ் போட்ட வாலிபர்கள் நகைகளுக்கும் பாலீஷ் போட்டு தருவதாக கூறினர். பின்னர் சம்பூரணத்திடம் இருந்து 3 பவுன், சுதாவிடம் இருந்து 2 பவுன் தங்க சங்கிலிகளை வாங்கி பாலீஷ் போடுவது போல நடித்து ஒரு பாத்திரத்தில் நகையை போட்டு அரை மணி நேரம் கழித்து பாருங்கள் என்று கூறி சென்று விட்டனர். சிறிது நேரம் கழித்து 2 பெண்களும் அந்த பாத்திரத்தில் பார்த்த போது நகைகளை காணவில்லை. உடனே தாங்கள் ஏமாந்து விட்டதை உணர்ந்த 2 பெண்களும் உணர்ந்தனர். பின்னர் இது குறித்து சம்பூரணம் கொடுத்த புகாரின் பேரில் மங்களமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக