Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 23 பிப்ரவரி, 2015

தமிழகத்தில் கோட்சே சிலைக்கு அனுமதி இல்லை : முதல்வர் பன்னீர்செல்வம்

சென்னை: தமிழ்நாட்டில் கோட்சே சிலை எங்கும் வைக்கப்படவில்லை என்று முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உறுதி கூறினார். சட்டசபையில் கவர்னர் உரையின் மீது நடைபெற்ற விவாதத்தின் போது முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

கோட்சே சிலை

அகில பாரத இந்து மகாசபா அமைப்பினர் நாதுராம் கோட்சேயின் சிலைகளை மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினமான கடந்த (ஜனவரி) மாதம் 30-ந்தேதி அன்று
நாடு முழுவதும் நிறுவப்போவதாக அறிவிப்பு செய்து ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து சிலைகளை நாடு முழுவதும் அனுப்ப ஏற்பாடுகளை செய்து வந்தனர். இதனைத் தொடர்ந்து மேற்படி அமைப்பில் இரு பிரிவுகளாக செயல்பட்டு வரும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மற்றும் திருச்சியைச் சேர்ந்த ராஜசேகரன் ஆகியோர் தமிழகத்தில் ஈரோடு உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கோட்சேயின் சிலைகளை அமைக்கப் போவதாக அறிவித்தனர்.

மேலும், இவ்விரு பிரிவினரும் காவல் துறையினர் சிலைகளை வைக்க அனுமதி மறுக்கும் பட்சத்தில் முதற்கட்டமாக தங்கள் அமைப்பின் அலுவலக வளாகங்களில் கோட்சேவின் சிலைகளை நிறுவ உள்ளதாகவும் தெரிவித்தனர்.

கட்சிகள் எதிர்ப்பு

ம.தி.மு.க., தமிழ் மாநில காங்கிரஸ், காங்கிரஸ், பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகம் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர், இந்திய தேசிய லீக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, மாநில அரசு இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தனர்.


ஆர்ப்பாட்டம்

சிலை நிறுவும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, சாதி மற்றும் மத ஒழிப்பு இயக்கத்தின் உறுப்பினர்கள்,  இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும், தந்தை பெரியார் திராவிட கழக உறுப்பினர்கள் 260 பேர் 30-ந்தேதி அன்று கோட்சேவின் உருவ பொம்மைகளை கோயம்புத்தூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் எரித்து எதிர்ப்பை தெரிவித்தனர்.

மேலும் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா கட்சியினர் 1600 பேரும் 23 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சிலைகள் அமைக்க மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் காவல் துறையினர் அனுமதி அளிக்காததையடுத்து, இவ்வமைப்பினர் அறிவித்தது போன்று 30.01.2015 அன்று தமிழகத்தில் கோட்சேவின் சிலைகள் எங்கும் நிறுவவில்லை.
நிலைமை கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். 
நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக