Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 7 பிப்ரவரி, 2015

முகநூலினால் நன்மையா? தீமையா?


இன்று முகநூலுக்கு பிறந்த நாள். 2004ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதிதான் முகநூல் ஆரம்பிக்கப்பட்டது. இதனைத் துவக்கிய மார்க் ஸுகர்பெர்க் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார், இது இந்த அளவு வளர்ச்சி பெறும் என்று. அந்த அளவுக்கு மிகப் பிரம்மாண்டமான வளர்ச்சியைப் பெற்றுள்ளது முகநூல்.

2004ல் அமெரிக்காவில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தன் ஐந்து நண்பர்களுடன் யூத இனத்தைச் சார்ந்த மார்க் முகநூலைத் துவக்கினார். முகநூலின் அபார வளர்ச்சியினால் 2007ல் தனது 23வது வயதிலேயே மார்க் கோடீஸ்வரரானார். முகநூலைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 2012ல் உலக அளவில் 100 கோடியைத் தொட்டது.
இவ்வளவு சாதனைகளைப் புரிந்துள்ள முகநூல் சமூகத்தில் எவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது என்பதைப் பார்க்க வேண்டும். முகநூல் மூலம் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ளது நன்மையா? தீமையா? என்று பட்டிமன்றம் வைக்கும் அளவுக்கு நிலைமை தீவிரமடைந்திருக்கிறது. ஏனெனில் இன்று இளைஞர்கள் பலரின் வாழ்வும், பேச்சும், மூச்சும் முகநூலாக மாறியிருப்பதைக் காண்கிறோம்.
வளரும் எழுத்தாளர்களுக்கு முகநூல் ஒரு பயிற்சிக் களம் என்று சிலர் கருதுகின்றனர். சிலர் அதனை நல்ல முறையில் பயன்படுத்தி சிறிய சிறிய நிலைத்தகவல்களை வெளியிட்டு, அதனைக் கோர்த்து கட்டுரைகளாக மாற்றுவதும் நடக்கிறது. அப்படி எழுத்தாளர்களை உருவாக்குகிறது முகநூல். உகாண்டாவிலுள்ள என் அருமை நண்பர் எழுத்தாளர் முஹம்மது ஃபைஸ் இந்த அனுபவத்தைப் பெற்றதாக கூறுகிறார்.
காயல் எழுத்தாளர் முஹம்மது ஷுஐப் அவர்கள் முகநூலில் கருத்துகளைப் பதிவது பற்றிக் குறிப்பிடும்பொழுது, “இன்றைய மின்னணு ஊடக உலகில் எந்த ஒரு கருத்தும் அது பதியப்பட்ட சில நிமிடங்களுக்கு மட்டுமே உயிர் வாழும் தன்மை கொண்டது. இதில் முகநூல் பதிவு, வேறொரு பதிவு என்று வேறுபாடு எதுவும் கிடையாது. இதில் நிலைத்து நிற்பவை, நிலையாமை கொண்டவை என்பது போன்ற வேறுபாடுகளை நாம் அலசிக்கொண்டிருக்க முடியாது. பதிவு செய்யப்பட்ட அந்தக் கணத்தில் அது உலகெங்கும் பரவுகிறது. எதிர், மற்றும் ஆதரவுக் கருத்துகளை நிமிட நேரத்தில் தெரிந்துகொள்ள முடிகிறது. அதற்குத் தகுந்தவாறு நாமும் நமது கருத்துகளை பதிவு செய்ய முடிகிறது. ஒரு வாதப்பிரதிவாதம் கண நேரத்தில் நிகழ்ந்து முடிந்துவிடுகிறது” என்று தனது முகநூல் பக்கத்தில் கூறுகிறார்.
கவிஞர் அதாவுல்லாஹ் போன்ற பழுத்த சிந்தனையாளர்கள் ஆக்கபூர்வமாக நல்ல பல கருத்துகளைப் பகிர்ந்து கொள்கின்றனர். எத்தனையோ முகவரி தெரியாதவர்கள் இன்று தங்கள் கருத்துகளை ஆணித்தரமாக பதிவு செய்யும் தளமாக முகநூல் விளங்குகிறது. எழுதத் தெரியாதவர்கள் கூட எழுத்துப் பிழைகளுடனும், கருத்துப் பிழைகளுடனும் தங்கள் கருத்துகளை எப்படியோ பதிவிட்டு திருப்திப்பட்டுக் கொள்கின்றனர்.
இன்று முகநூலில் உலகின் நடப்புகள் உடனுக்குடன் பதியப்படுவதால் முதல் கட்ட தகவல்கள் (First hand informations) கிடைத்துவிடுகின்றன. இது அடுத்ததாக அந்தச் செய்திகளை விரிவாகத் தெரிந்திட வழி வகுக்கிறது.
முன்பெல்லாம் நீண்ட நாட்கள் சந்திக்காத பழைய கால நண்பர்கள், பள்ளி-கல்லூரி நண்பர்கள் அவ்வப்பொழுது நினைவில் வந்து மறைவார்கள். ஆனால் இன்று முகநூல் மூலம் அந்தப் பழைய கால நண்பர்களைத் தேடிக் கண்டுபிடித்து விடலாம். அவர்கள் எங்கு இருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்று எல்லாம் தெரிந்து விடும். அவர்களுடன் நட்பு வட்டத்தை மீண்டும் தொடர முடியும்.
இது முகநூலின் நன்மையின் பக்கம் என்றால் தீய மறுபக்கமும் இருக்கத்தான் செய்கின்றது. இன்று இளைஞர்களின் கூடாரமாக முகநூல் மாறியிருக்கிறது. முகநூலின் மூலம் முகம் தெரியாதவர்களை வஞ்சகமாக கவர்ந்து தங்கள் வக்கிர ஆசைகளைத் தீர்த்துக்கொள்ளும் நிறைய நிகழ்வுகளைக் கேள்விப்படுகிறோம்.
எப்பொழுதும் முகநூலிலேயே கிடந்து அதற்கு அடிமையாகும் நிலையும் இன்றைய இளைஞர்கள் பலரிடம் ஏற்பட்டுள்ளது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை இவர்கள் எண்ணுவதில்லை. அது அதற்கென்று நேரம் ஒதுக்குவது போன்று முகநூலுக்கென்று சிறிது நேரம் ஒதுக்க வேண்டும் என்ற பார்வை அவர்களிடம் இல்லை. விலை மதிப்பில்லாத இன்றைய இளைஞர்களின் நேரங்கள் இன்று முகநூலில் விழலுக்கு இரைத்த நீராய் வீணாய்ப் போகின்றன.
கண்டதையும் படிக்கும் நிலை, காணக் கூடாததையும் காணும் நிலை… இதனைத்தான் ஷேக் அகார் முஹம்மத் அவர்கள் எத்தனையோ பொக்கிஷங்களை விட்டு குப்பைகளைப் படித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று ஓர் உரையில் குறிப்பிடுவார்.
நல்ல இணையதளங்களில் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள் போன்றவற்றைக் கூட முகநூல் வழியாக விளம்பரம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. ஏனெனில் கடை விரித்தேன், கொள்வாரில்லை என்பது போல் எவ்வளவு நல்ல விஷயங்களை இணையதள பக்கங்களில் வெளியிட்டாலும் சீண்டுவதற்கு சிலர் மட்டும்தான். மற்றவர்களை முகநூலில் சென்றுதான் பிடிக்க வேண்டியுள்ளது.
முகநூல் ஏற்படுத்தியுள்ள இன்னொரு விபரீத விளைவு வாசிப்பின் தன்மை மாற்றம். சின்னச் சின்ன செய்திகளை முகநூலில் படித்து பழகியவர்களுக்கு அதிலேயே கொஞ்சம் விரிவான செய்திளைப் படிக்கக்கூட பொறுமை இல்லை. இவர்கள் எப்படி புத்தகங்களை எடுத்து பொறுமையாக வாசிப்பார்கள் என்ற கேள்வி எழுகிறது. மிதமிஞ்சிய முகநூல் பயன்பாட்டால் வாசிப்புக் கலாச்சாரம் மங்கி வருகின்றது.
இப்படி நன்மையும், தீமையும் நிறைந்த முகநூலை முற்றாக ஒதுக்கவும் கூடாது. முழுவதுமாக மூழ்கவும் கூடாது. நடுநிலையைப் பேணுவதே நமக்கு நலம் பயக்கும்.
நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக