Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

படித்ததில் பிடித்தது ....


இன்றைய தமிழ் இந்துவில் "பெண்களைத் துரத்தும் ஆடைக்கட்டுப்பாடு"என்ற தலைப்பில் விவாதத்திற்கு வித்திட்டுள்ளார்கள்.அதற்கு நான் எழுதியது.

ஆடை என்பது தனது உடலை மறைப்பதற்காகத்தானே தவிர உடலை திறந்து போட்டு வருவதற்காக அல்ல.அவ்வாறு திறந்த மேனியாக வலம் வருவேன் என்றால் அதற்கு ஏன் ஆடை அணிய வேண்டும்.சும்மாவே வந்து விடலாமே?அந்த சிறிய ஆடையையும் அப் பெண்ணுக்கு அணிய கொடுத்து அவளின் உரிமையை ஏன் மறுக்க வேண்டும்?
ஆண்களுக்கு இது போன்று சொல்லப்பட வில்லை பெண்களுக்கு மட்டும்தான் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது என்கிறீர்கள்.உதாரணத்திற்கு ஒபாமாவையும் அவரின் மனைவியையும் சுட்டி காட்டியிருக்கிறீர்கள்.எந்த நாட்டிற்கு செல்லும்போது ஒபாமா அரை டவுசருடன் சென்று அனுமதிக்கபட்டு அவரின் மனைவிக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டது என்பதை சொல்லவில்லையே?
ஏன் ஒபாமா மட்டும் முழு ஆடை அணிய வேண்டும்?அரைகுறை ஆடையுடன் செல்வதில் தப்பென்ன ஏற்படப்போகிறது?
இங்கு உரிமைகள் என்பதற்கு ஒரு வரையறை இல்லாமல் போய் கொண்டிருக்கிறது.
ஆடை உரிமை என சொல்லி அரை குறையுடன் தெரிவதற்கு உரிமை கோருகிறார்கள்.
ஓரினச்சேர்க்கை என்பது அவரின் உரிமை எனக்கூறி அதற்கும் உரிமை கோருகிறார்கள்.
மது அருந்துவதும் அவரின் உரிமைதான் அதற்கும் இயக்கம் உருவாகி விட்டது இனி அவர்களும் உரிமை கோருவார்கள்.
இவ்வாறு ஒவ்வொரு தீமைகளையும்,தவறுகளையும் மையபடுத்தி உரிமை கோருவது தொடரத்தான் செய்யும்.எதை மறுப்பது எதை ஆதரிப்பது.
உரிமைகள் சுய ஒழுங்குகளையும் கண்ணியத்தையும் பால்படுத்துவதாக இருத்தல் கூடாது.அவ்வகையில் உள்ளவைகள் அது எவ்வளவு பெரிய உரிமையாக இருந்தாலுமே அது ஒழிக்கப்படுதலே வேண்டும்.அவ்வகையில் ஒபாமாவின் மனைவிக்கு சவூதி அரேபியா சென்ற சமயத்திலும்,இந்தோனீசியாவில் பள்ளிக்குள் சென்ற சமயத்திலும் ஆடை கட்டுப்பாடு விதித்தது வரவேற்கத்தக்கதே.

முகநூலிலிருந்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக