Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 16 பிப்ரவரி, 2015

குஜராத் கலவர வழக்கில் 70 பேரும் விடுதலை! 12 ஆண்டுகளுக்குப் பிறகு (அநீத) தீர்ப்பு!!

குஜராத்:  குஜராத் கலவரம் தொடர்பான ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 70 பேரையும் குஜராத் மாநில நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இந்த வழக்கில் சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2002-ல் குஜராத் முழுவதும் முஸ்லிம்களுக்கு எதிராக பெரும் கலவரம் வெடித்தது. கலவரத்தின்போது 2002 மார்ச் 2-ம் தேதி பனஸ்கந்தா மாவட்டம், சேஷன் கிராமத்தில் சுமார் 5 ஆயிரம் பேர் கொண்ட கும்பல் புகுந்து தாக்குதல் நடத்தியது.
இதில் குழந்தைகள், பெண்கள் உட்பட 14 பேர் கொல்லப்பட்டனர்.  இதுதொடர்பான வழக்கு பனஸ்கந்தா மாவட்ட கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. மொத்தம் 70 பேர் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டது. 190 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.
போதிய ஆதாரம் இல்லை
இந்த வழக்கில் 2002-ம் ஆண்டில் முதல் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அடுத்தடுத்து 12 குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன. சுமார் 12 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது.
‘குற்றம் சாட்டப்பட்டுள்ள 70 பேர் மீதான குற்றங்களை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லாததால் 70 பேரும் விடுதலை செய்யப்படுகின்றனர்’ என்று நீதிபதி வி.கே.புஜாரா தீர்ப்பளித்தார்.
தீர்ப்பு குறித்து அரசு வழக்கறிஞர் டி.வி.தாக்குர் கூறியபோது, வழக்கில் நேரடி சாட்சிகள் மவுனமாகிவிட்டனர். வாய்மொழி சாட்சிகள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று தெரிவித்தார்.
நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக