மதத்தின் பெயரால் மக்களை பிளவுப்படுத்துகின்ற குழுக்களை கண்டித்தும் அந்த குழுக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும்
தேவாலயங்களும், மசூதிகளும் தொடர் தாக்குதலுக்கு உள்ளான போதும் கூட மத்தியில் அமைந்திருக்கும் அரசு செயல்படாமல் இருப்பதை கண்டித்தும்
அனைத்துச் சமுதாய மக்களும் அமைதியாக வாழ வழிவகை செய்ய வலியுறுத்தியும்
தேச ஒற்றுமை இயக்கத்தின் சார்பாக வருகின்ற 28.02.2015 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் தொடர் முழக்க கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.
அதில் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர் உள்ளிட்ட பல்வேறு சமயத் தலைவர்களும், பல்வேறு அரசியல் கட்சிகளை சார்ந்த அரசியல் தலைவர்களும் பங்கேற்று தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்ய இசைந்துள்ளனர்.
இதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி இன்று 16-02-2015 சென்னை அபு பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் துணைத் தலைவர் குணங்குடி ஆர்.எம்.ஹனீபா அவர்களும்,பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுச்செயலாளர் M. முஹம்மது ஷேக் அன்சாரி அவர்களும், இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பின் தலைவர் ஹனீபா அவர்களும்,இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் எஸ்.எம்.பாக்கர் அவர்களும், கிருத்துவ இயக்கங்கள் திரு இனிகோ இருதயராஜ் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக