+2வில் எந்த குரூப்பை தேர்வு செய்வது?
10 ஆம் வகுப்பு முடித்து 11ம் வகுப்பு செல்கின்ற போதே சில பாடப்பிரிவுகளைக் கொண்ட குரூப் பிரிக்கப்பட்டு மாணவர்கள் அந்த நிலையிலேயே தங்களுக்கான எதிர்கால துறைகளை தேர்வு செய்திட வேண்டிய கட்டாயம் இன்றைய கல்வி முறையில் நிலவுகிறது.
பக்குவம் இல்லாத மாணவர்கள்,
உயர்கல்வி குறித்தும் வேலை வாய்ப்பு குறித்தும் புரிதல் இல்லாத பெற்றோர், இதனால் மாணவர்களின் தனித்திறன் அவர்களின் பொருளாதார வசதிகள் குறித்து தெரிந்து கொள்வதற்கு பொறுமை இல்லாத ஆசிரியர்கள், மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் அவர்களுக்கு குரூஃப் ஒதுக்கி சிக்கலில் தள்ளிவிடுகின்றனர்.
இதனால்12ம் வகுப்பு முடித்து தனக்கு விருப்பமான பாடத்தை எடுத்து படிக்க முடியாமல்; பயின்று வந்த குரூப் வட்டத்திற்குள் நின்றே உயர் கல்வியை தேர்வு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் நிலவுகிறது.
ஒரு மனிதன் வாழ்வின் எந்த நிலையிலும் எந்த வயதிலும் எதை வேண்டுமானாலும் படித்து பட்டம் பெறுவதற்கு வாய்ப்புகள் இருக்க வேண்டும். உலக நாடுகளில் அத்தகைய வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இந்தியாவில் அந்த நிலை இல்லை.
அதனால் 10ம் வகுப்பு முடித்து குரூப் எடுக்கும் போது மிகுந்த எச்சரிக்கை தேவை 10ம் வகுப்பில் 275 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்கும் அனைவரும் அறிவியல் பாடத்தில் விருப்பம் இருந்தால் ‘‘உயிரியல்’’ குரூப் பை தேர்வு செய்வது நல்லது.
அறிவியலில் விருப்பம் இல்லாதவர்கள் அதிக மதிப்பெண் எடுத்திருந்தாலும் கலைப்பிரிவு குரூப் எடுப்பது தான் சிறந்தது.
முடிந்த வரை கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவை தவிர்ப்பது நல்லது.
கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவை எடுப்பவர்களுக்கு மிகக் குறுகிய எண்ணிக்கையிலான படிப்புகளும் வேலைவாய்ப்புகளுமே உள்ளது. ஆய்வாளர்களாக, சாதனையாளர்களாக உருவாகும் வாய்ப்பு இதில் குறைவு.
எச்சரிக்கை தேவை!
மின்னஞ்சல் மூலம்
Basha Haja Mohideen
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக