பாபா சாஹேப் அம்பேத்கரின் 125-ம் ஆண்டைக் கொண்டாடும் இந்த உன்னதமான கால கட்டத்தில், இனியும் நம் நாட்டில் கழிவுகளைத் தலையில் சுமக்க வேண்டிய அவல நிலை தொடரக் கூடாது என்று பிரதமர் மோடி கூறினார்.
அகில இந்திய வானோலியில் ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்பான பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி நிகழ்த்திய உரையில்,
“இன்றும் கூட தங்கள் தலைகளில் கழிவுகளைச் சுமக்கும் குடும்பங்கள் இந்தியாவில் இருக்கின்றதே, இந்த நிலையை நீட்டிப்பது நமக்கு அழகா? பாபா சாஹேப் அம்பேத்கரின் 125ம் ஆண்டைக் கொண்டாடும் இந்த உன்னதமான கால கட்டத்தில், இனியும் நம் நாட்டில் இப்படிக் கழிவுகளைத் தலையில் சுமக்க வேண்டிய அவல நிலை தொடரக் கூடாது என்று நான் அரசுத் துறைகளிடம் வலியுறுத்திக் கூறினேன். இதை இனிமேலும் நாம் பொறுத்துக் கொள்ள முடியாது. இதில் சமூகத்தின் ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது. அரசும் இதில் தனது கடமையை ஆற்ற வேண்டும்” என்று கூறினார்.
“மலம் அள்ளி தூய்மைப்படுத்தும் பணியை செய்யும் துப்புரவாளர்கள், அதற்காக பெருமைப்பட வேண்டும். இதன் மூலம் கடவுளின் நெருக்கத்தை அவர்கள் பெறுகிறார்கள்… என மோடி 2007 ல் வெளிவந்த “கர்மயோக்” புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார் என்பது நினைவு கூறத்தக்கது!”
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக