Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 27 ஏப்ரல், 2015

நம் குழந்தைகளுக்கான பள்ளிக்கூட சூழ்நிலை

பிஸ்மில்லாஹ்ஹிர்ரஹ்மானிர்ரஹீம்
நம் குழந்தைகளுக்கான பள்ளிக்கூடசூழ்நிலை
எல்லாபுகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!
சலவாத்தும் சலாமும் எம்பெருமானார் நபி முஹம்மது(ஸல்) அவர்கள் மீதும், உற்றார் உறவினர்கள் ,குறிப்பாக நம் அனைவரின் மீதும் உண்டாவதாக!
அல்லாஹ் நமக்கு எத்தனையோ நிஃமத்துக்கள் வாரி வழங்கியுள்ளான் அவற்றில் குழந்தை செல்வம் முக்கியமானது, அல்லாஹ் நம்
குழந்தைகளை நம்மிடம் அமானிதமாக ஒப்படைத்துள்ளான். குழந்தைகள் மாசு அற்ற வெள்ளை தாளைப் போல தூய்மையானவர்கள், பெற்றோர்கள் ஆகிய நாம் எப்படி நடந்து கொள்கிறோமோ , அதன்படியே நம் குழந்தைகள் காப்பி அடிக்கும்.     குழந்தை வளர்ப்பு மிக முக்கியமான விஷயம். ஒவ்வொரு குழந்தையும் பல பரம்பரைகள் உருவாக காரணமாக போகின்றது.
அல்லாஹ் இதன் சிரமங்களை உண்ர்ந்ததாலேயே நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்எவர் 3 பெண்குழந்தைகள் பிறந்து, அந்த குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்து, நல்ல துணையை தேர்வு செய்து மணமுடிப்பார்களோ அவர்கள் சொர்கவாசிஎன்பதாக குழந்தைகளுக்கு எதை நாம் கொடுக்கின்றோமோ அதையே அவை செய்யும். நல்ல சூழ் நிலை, நல்ல கல்வி , நல்ல நண்பர்கள் , நல்ல உணவு, உடல் நலம் பேணுவது மிக, மிக அவசியம்.
ஆண்-பெண் கலந்து படிப்பது மார்கத்தில் முற்றிலும் ( ஹராம்) தடை செய்யப்பட்டுள்ளது. இன்னும் எத்தனை பெண்கள் Co-Education-ல் படித்துக் கொண்டு உள்ளனர்.
மாற்றுமத கலாச்சாரத்தை பிரதானப்படுத்தும் பள்ளிக் கூடம் என்று தெறிந்தும் நம் தலைமுறையை அங்கே தாரைவார்கின்றோமே? சிந்திக்க வேண்டாமா? அங்கே ஒவ்வொரு தடவையும் பள்ளியினுள் நுழையும் மேலும் பிரதானமாக அமைக்கப்பட்டுள்ள சிலைகளை தாண்டித்தான் போக வேண்டும், School Prayer – ல் தினமும் பூஜையும் , ஸோஸ்திரமும் , பரீட்சைக்கு முன் ஆசிரியர் காலில் விழுந்து வணங்கி, பிரசாதம் பெற்றுக்கொள்ள வேண்டும். பள்ளி நுழையும் முன்பே புர்கா, ஹிஜாப்அனுமதியில்லை அகற்றப்படவேண்டும்.. வேறு சில பள்ளிகளில் ஹிஜாபை அனுமதித்தாலும் “Friends  எல்லாம் கிண்டல் செய்கிறார்கள்என்று ஹிஜாபை அகற்றிவிட்ட மாணவிகளை பார்க்கின்றோம். பெற்றோர்களே எப்படி சகித்துக் கொள்கின்றீர்கள்.
இன்று நம் குழந்தைகளுக்கான கல்விக் கூடங்களை ( பள்ளிக்கூடம் ) தேர்வு செய்யும் போது நம் கவனத்தில் கொள்வது எது?
பயிர்ச்சி நல்லாயிருக்கா (Coaching Super) …
எம்பிள்ளை எழுத்தும் எழுத்து முத்து, முத்தா எழுதுமா
மார்க்கு பல மடங்கு அதிகமெடுக்குமா
எதிர்காலத்தில் உயர்கல்விக்கு நன் கொடையின்றி சீட்…………
நம் கவனத்தில் கொள்ள மறுப்பது எதை?
Coaching இருக்கு ஹிஜாபோடு, பர்தாவோடு(கோஷாவோடு)இருகுமா?
மார்க்கு அதிகமெடுக்கும் ? மார்க்கம் இருக்குமா?
எழுத்து அழகாகும் , ஈமான் அழகாகுமா?
உயர் கல்வியில் சீட் கிடைக்கும் , நாளை மறுமையில் சுவர்கத்தில் தரஜா கிடைக்குமா? ஜும்மா தொழுகை கிடைக்குமா?
கண்களை விற்றுவிட்டு சித்திரம் வாங்குவதா?
மார்கத்தை இழந்தாலும் மார்குதான் முக்கியமா?
சைத்தான் நம்முடைய பகிரங்கமான விரோதி. அவன் ஆயிரம் தந்திர வழிகளையும், வலைகளையும் விரிப்பான், அவன் உங்களை இப்படி சொல்லி ஏமாற்றுவான்
“Prayer-ல் எங்க பிள்ளைகள் ஒன்றும் செய்யாது சும்மாதான் நிற்கும்”,
எங்கள் பிள்ளைகள் பிரசாதம் வாங்கி பிற மாணவியிடம் கொடுத்துவிடுவார்கள்”.
பள்ளிக்கு உள்ளேதானே புர்கா இல்லாமல் உள்ளது, வெளியே வரும் போதுதான் போட்டுக்கொள்ளுதேஎன்ற சமாளிப்பு வெண்டாம். சூழ்நிலைதான் ஒரு மனிதனை உருவாக்குவதும் , கெடுப்பதும், கொல்லம் பட்டறையில் நீங்கள் சென்று சும்மா இருந்தாலும் நெருப்பு படவில்லையெனில் புகையும், கரியும் உங்கள் மீது படுவதை தவிர்க்க முடியாது!
அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.
நபி(ஸல்) அவர்கள் ஒரு ஹதீஸ்-ஐ நாம் வாசித்தால் , நம் உள்ளத்தில் ஒரு ( நூர்) ஒளியை அல்லாஹ் போடுகின்றான். நம் குழந்தைகள் தினமும் சாமியையும் , பூஜையும், ஏசுவையும் , தோத்திர பாடல்களையும் தினமும் கேட்கும் போதும், பார்க்கும் போதும் உள்ளம் ஈமானை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக காலியாகும் அபாயம் உள்ளது.
அல்லாஹ் நமக்கு வழங்கிய அழகிய வாழ்க்கை முறையில்தான் நிம்மதி , ராகத்து , சந்தோஷம் , வெற்றி உள்ளது. சைத்தான் நமக்கு வெற்றி , லாபம் , என்று காட்டுவது எல்லாம் கானல் நீர். மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவதைப் போன்றது.
அல்லாஹ் நமக்கு வழங்கிய வாழ்க்கை முறை கலாச்சாரத்தை உயிரே போனாலும் விடுவதற்கு அனுமதி இல்லை. இன்னும் நபி(ஸல்) அவர்கள் கூறிய் ஹதீஸின் கருத்து , மாற்று மதத்தினரை போல நீங்கள் எதையும் செய்ய வேண்டாம் , அவர்களுக்கு மாற்றமாக நடந்து கொள்ளவே அறிவுறித்தியுள்ளார்கள். மாணவிகள்எங்கள் பள்ளியில் முஸ்லீம்கள் வெகு குறைவு எனவே Scarp போட்டால் எல்லோரும் கிண்டல் செய்வதால் கழற்றிவிட்டோம், பள்ளியில் போடுவது இல்லைஎன்ற செய்தியும் , “ ஒரு நாள் பிரசாதம் எப்படி உள்ளது என சாப்பிட்டு பார்த்த தன் முஸ்லீம் நண்பியைபற்றி சொன்ன செய்தியும் ஆச்சிரியம் அளிக்கவில்லை, ஏனெனில் ஒரு பஞ்சை எடுத்து பாலில் போட்டால் பாலைத்தான் உருஞ்சும், எடுத்து பிழிந்தால் பால்தான் வரும்.இன்னும் கொஞ்ச நாள் போனால் மாற்று மத கலாச்சாரம் , பேச்சு, நடவடிக்கையோடு , நம்பிக்கையும் (ஈமான்) கொஞ்சம் கொஞ்சமாய் மாறும்.
கனி இருக்க காய் கவர்வது ஏன்?
+2 வரையிலும் பெண்கள் பள்ளிக்கூடம் உள்ளது,இஸ்லாமிய கலாச்சாரத்தோடு கூடிய முஸ்லீம் Management கல்லூரிகள் உள்ளது. அவைகளை மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆணாயினும் , பெண்ணாயினும் , தொழுகை, ஈமான், இஸ்லாமிய கலாச்சாரம் முக்கியதுவம் எங்குள்ளதோ, அந்த பள்ளிகள் / கல்லூரிகளையே தேர்வு செய்து உங்கள் குழந்தைகளை சேர்பீர், இல்லயெனில் உங்கள் பிள்ளைகள் இம்மையிலும் மறுமையிலும் உங்களுக்கு உதவாது , மாறாக உங்கள் மீது இறைவனிடத்தில் வழக்கு தொடுக்கும்.
நமதுவெற்றிஅல்லாஹ், அவனுடைய ரஸூல் வழி மட்டுமே .
நமது சமுதாயம் , நமதுஎதிர்கால சந்ததி, ரஸூல் வழிகல்வி முறைல்மட்டும் தான்.
நாம் ஏற்கனவே தாமதம்செய்துவிட்டேரம் . நமது சமுதாயம்சந்திக்ககும்மோசமானசதிதிட்டம்நமதுகல்வி முறை .
 
நமது சமுதாயம்
நமதுஎதிர்கால சந்ததி
நமதுசொந்த இஸ்லாமிய பள்ளி&கல்லூரிகள்
நமதுசொந்தஇஸ்லாமிய கல்விமுறை
 
இப்பொழுது திட்டத்தைசெய்யுங்கள்
இஸ்லாமிய பள்ளி ஒவ்வொரு முஸ்லிம்கள் கிராமத்திற்குமுடிவு செய்வேம் .

மின்னஞ்சல் மூலமாக
பாஷா ஹாஜா மொய்தீன்




1 கருத்து:

  1. சகோதரரின் கட்டுரை சமூகத்தில் நடக்கும் எதார்தத்தை பதிவு செய்கின்றது.
    அவர்களின் கவலையும் கட்டுரையூடே வெளிப்படுகின்றது.

    நமது பிள்ளைகளுக்கு கல்வி வழங்குவது , அவர்களை இன்றைய சவால்களை எதிர்கொண்டு இஸ்லாத்தை நிலைநாட்டும் வீரர்களாக மாற்றுவது நமது அனைவரது கடமை.

    ஆனால் ஏன் இன்னும் இதற்கு தேவையான பள்ளிகூடங்களை, தொழில் கல்விகூடங்களை நம் சமூகம் உருவாக்கவில்லை என்றுதான் எனக்கு புரியவில்லை.

    ஒரு மனிதன் தனக்கு தேவையான வீட்டை கட்டிக்கொள்கின்றான், வருமானத்திற்கான தொழிலை உறுதிபடுத்துகின்றான்.
    அதற்காக அவன் பெரிய அளவில் பிராமாண்டபடுத்தி, பரப்புரை செய்து அதனை செய்வதில்லை. அதுபோன்றுதான் ஒரு சமூக்கத்திற்கு தேவையான கல்விகூடங்கள், பொருளாதார தீர்வுகள் செய்வது நமது கடமை. அதற்காக நீண்ட யோசனைகள், பரப்புரைகள், விளம்பரங்கள் தேவையில்லை.

    அமைதியாகவும், ஆக்கபூர்வமாகவும் எப்போதோ செய்ய வேண்டிய பணிகளை இன்னும் செய்யாமல் இருக்கின்றோமே என்ற அவமானம் நம்மை தொற்றிகொள்கின்றது.

    இனிமேலாவது நாம் ஓர் உம்மத் என்ற எண்ணம் மேலோங்கி அடிப்படை பணிகளை வேகமாக செய்வோம், பரப்புரையும் விளம்பரமும் இல்லாமல், இன்ஷா அல்லாஹ்.

    பதிலளிநீக்கு