பெரம்பலூர், ஏப்.11– செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் லெப்பைக் குடிக்காட்டில், தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை பொது மக்கள் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.
செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனைகள், நலத்திட்டங்கள் குறித்தும், தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள், அரசின் திட்டங்களை செயல்படுத்தும் நிகழ்ச்சிகள் குறித்து புகைப்படங்கள் அடங்கிய சிறு புகைப்படக்கண்காட்சிகள் அரசின் முக்கிய விழாக்கள் மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் மூலமாக அரசின் நலத்திட்ட உதவிகள் குறித்தும், பயனடைந்தவர்கள் குறித்தும் அந்தந்த பகுதி மக்கள் அறிந்து கொள்ளவும், திட்டங்கள் குறித்து விளக்கம் பெறவும், பொதுமக்களிடையே அத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு உண்டாக்கவும் எளிதாக இருக்கிறது.
இச்சாதனை விளக்க புகைப் படக்கண்காட்சியில் தமிழக முதலமைச்சரின் சிறப்புத்திட்டங்களான விலையில்லா அரிசி வழங்கும் திட்டம், ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு தங்கம் வழங்கும் திட்டம், விலையில்லா மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் வழங்கும் திட்டம்,
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம், கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டம், விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம், இலவச சீருடை வழங்கும் திட்டம், விலையில்லா ஆடு வழங்கும் திட்டம், உயர்த்தப்பட்ட முதியோர் ஓய்வூதியம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட அரசு நலத்திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் பெரியஅளவில் மக்களை கவரும் வகையில் கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தது.
செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் வைக்கப்பட்ட புகைப் படக்கண்காட்சியை பார்வையிட்ட பொதுமக்கள் தமிழக முதலமைச்சர் திட்டமிடப்பட்டு செயல் படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்த புகைப்படங்களை பார்வையிட்டு அரசின் திட்டங்கள் குறித்து விளக்கம் பெற்றனர். தமிழக முதல்வர் சிறப்புத் திட்டங்கள் குறித்து செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் விளக்கம் அளித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக