Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 8 ஏப்ரல், 2015

சிதரும் முத்துக்கள்!-ஆரூர்.யூசுப்தீன்

நாளைய இந்தியாவின் தூண்ங்கள் என்று நமது முன்னாள் பாரத குடியரசு தலைவர் திரு.A.P.J.அப்துல் கலாம் அவர்கள் கூறிய மாணவ செல்வங்கள் தற்பொது சந்திக்கும் பிரச்சனைகளில் மிகபெரிய பிரச்சனை அவர்கள் உயிரைகுடிக்கும் வாகன விபத்துகள் தான்.
சமீபக்காலமாக கல்லூரி வாகன விபத்துகள் அதிகமாக நடந்துள்ளது. இது நேராகவும்
மறைமுகமாகவும் நமது நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும் நிகழ்வாகும். தனது கனவையும், பெற்றோரின் ஆசையும், நாட்டின் முன்னேற்றத்தில் தன்னுடைய பங்கினையும் சுமந்து தனது கல்லூரி வாழ்கையை தொடங்குகிறான். படிப்பை தொடங்கிய பாதியிலேயே விபத்து என்னும் கோர நிகழ்வால் இவனுடைய எண்ணங்கள் தகர்த்து எரியபடுகிறது. இப்படிபட்ட விபத்துகளுக்கு காரணிகளாக வாகனத்தின் மோசமன நிலையும், வாகன ஓட்டியின் அனுபவயின்மையும் மற்றும் சாலையின் ஒழுங்கற்ற அமைப்பும் என்று அதிகமாக சொல்லபடுகிறது. இப்படி காரணிகளை அடுக்கிகொண்டே போகலாம் இருந்தும் இப்படி நடதந்தேரும் விபத்துகளை தனியார் மற்றும் அரசின் அழுத்தங்கள் காரணமாக ஊடகமும் மூடி மறைகிறது. சில நாட்களுக்கு முன் செட்டிநாடு கல்லூரி பேருந்து திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த மாணவிகளை அழைத்துக் கொண்டு சென்று கொண்டிருந்தது. திருச்சி–கரூர் மெயின் ரோடு சித்தலவாய் கிராமத்தை அடுத்த பொய்கை புதூர் அருகே பஸ் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த லோடு வேன் மீது பயங்கரமாக மோதியது.இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த ரிபானா பானு (வயது 20), இ.சி.இ. 2–ம் ஆண்டு,திருச்சி சிறுகனூர், கோகிலா (21), இ.சி.இ. 3–ம் ஆண்டு, பெட்டவாய்த்தலை.,ராஜகுமாரி (29),லேப் டெக்னீசியன் மற்றும் ஒரு மாணவி உயிரிழந்தார்கள்.இந்த விபத்திற்கு ஓட்டுனரின் தவறான பேருந்து இயக்கம் தான் என்று பெரும்பாலும் கூறபடுகிறது. மேலும்  பயணம் செய்த 17 மாணவ–மாணவிகள் படுகாயம் அடைந்தனர். இதேபோல் சில வாரங்களுக்கு முன் சென்னையில் பள்ளிவாகனம் ப்ரேக் செயலிழந்து வாய்காலில் விழுந்து 3 மாணவ செல்வங்கள் இறந்தன. கன்னியாகுமரியில் நடந்த கல்லூரி வாகன விபத்தில் ஒரு மாணவன் இறந்துள்ளான் இதுபோல் இன்னும் பல.
விபத்தில் இறந்த மாணவர்களுக்கு அரசு எந்த ஒரு நிவாரணத்தையும் செய்யவில்லை. மாணவர்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்து சேவையை செய்வதும் இல்லை. தனியார் கல்லூரியில் மட்டும் தான் இப்படிபட்ட விபத்துகள் நடைபெறுகிறது என்று கூறமுடியாது.
அரசு மற்றும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு வெறுமனே அரசு பேருந்துகளில் இலவச பயணத்தை உறுதிசெய்து அவர்களின் உயிருக்கு உறுதிசெய்யமறுகிறது. அரசு பேருந்துகளின் நிலை பொதுமக்கள் அறிந்ததே சென்னை மற்றும் நெல்லை போன்ற மாநகரத்தில் மிகவும் மோசமான நிலையில் இயகங்கும் பேருந்து நிரம்பவே இருக்கிறது. எண்ணிக்கைக்கு அதிகமாக மாணவர்களை ஏற்றி பேருந்தின் நிலை கட்டுபாட்டை இழந்து பேருந்துகள் விபத்துகளை சந்திகின்றது. இதுபோன்ற விபத்துகளால் நாடு இழப்பது நாட்டின் அடுத்தA.P.J.அப்துல் கலாமையும் ,விண்வெளி வீரங்கணி கல்பனா சாவ்லாவையும், இஸ்ரோ ராதாகிருஷ்ணனையும் இழக்கிறது என்பதை புரிந்து இப்படிபட்ட விபத்துகளை தடுக்கும் செயல்களில் அரசு ஈடுபடவேண்டும்.
நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக