டெல்லி: ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் பங்கேற்றது குறித்து விப்ரோ நிறுவனத் தலைவர் அஸிம் பிரேம்ஜி விளக்கம் அளித்துள்ளார்.
டெல்லியில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் இன்று நடந்த விழாவுக்கு விப்ரோ நிறுவன தலைவர் அஸிம் பிரேம்ஜி சிறப்பு அழைப்பாளராக சென்றிருந்தார். அவருக்கு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அழைப்பு விடுத்திருந்தார். ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் அஸிம் பிரேம்ஜி பங்கேற்றது சலசலப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக, ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அஸிம் பிரேம்ஜி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் பங்கேற்றது குறித்து விளக்கம் அளித்துள்ள அஸிம் பிரேம்ஜி, “எனது பங்கேற்பு பலரால் விரும்பத்தகாத ஒன்றாக பேசப்படுகிறது. ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் பங்கேற்பதால் நான் அவர்களது கொள்கைகளை பரப்புவதற்கு வந்திருப்பதுப் போல பேசுகிறார்கள்.
எனக்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்த நாட்டை நான் நேசிக்கிறேன்.நான் ஆர்எஸ்எஸ் ஆதரவாளர் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
நன்றி தூது ஆன்லைன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக