பாரம்பரிய உணவிற்கு மாறுவோம்! தேசத்தை வலுப்படுத்துவோம்! பாப்புலர் ஃப்ரண்ட் தமிழ் மாநில தலைவர் வேண்டுகோள்!
சென்னை: சுகாதாரமான வாழ்வின் அவசியத்தை உலக மக்கள் உணர வேண்டி உலக சுகாதார நாளாக கடைபிடிக்கப்படும் ஏப்ரல் 7ம் தேதியான
இன்று பாப்புலர் ஃப்ரண்டின் தமிழ் மாநில தலைவர் திரு.எம்.முஹம்மது இஸ்மாயில் அவர்கள் நாட்டு மக்களிடம் சில கோரிக்கைகளை முன்வைக்கிறார்.
இந்தியாவில் வாழும் இளைஞர்களிடம் “அவசர கதி” வாழ்க்கை முறை மிக வேகமாக அதிகரித்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடுகிறது. இத்தகைய அவசர கதி வாழ்க்கையில் அவர்களின் உணவு முறைகளும் கூட அவசர உணவாகவே (துரித உணவு) மாறிவிட்டது.
இந்தியாவில் முன் எப்போதும் இல்லாத வகையில் குழந்தைகள் மரணமும் நீரிழிவு நோய், புற்று நோய், இதய நோய்களும் அதிகரித்து வருவது போன்ற பல அதிர்ச்சியூட்டக் கூடிய உண்மைகளை அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (Centre for Science and Environment) வெளியிட்டுள்ள 48 பக்க ஆய்வு முடிவுகள் குறிப்பிடுகிறது. எல்லாவற்றுக்கு காரணமாக விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுவது துரித வகை உணவுகளைத்தான். தொடர்ந்து நாடு முழுவதும் குறைந்தபட்சம் கல்வி நிறுவனங்களிலாவது துரித வகை உணவுகளை (Junk foods) தடை செய்து குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என்று அந்த மையம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
சுகாதார குறைவின் காரணமாக ஏற்படும் நோய்களை குறித்து உலக சுகாதார நிறுவனம் ஒரு அறிக்கை வெளியிடுமானால், அதில் இந்தியாவின் பெயர் தவறாமல் இடம் பெறுகிறது. துரித உணவுகளை உண்பதால் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் ஏற்படுகின்றன. இந்தியாவில் 1990-ம் ஆண்டில் மேற்கண்ட நோய்களால் ஏற்படும் இறப்பு 29 சதவீதமாக இருந்தது. இது 2008-ம் ஆண்டு 53 சதவீதமாக உயர்ந்தது. 2020-ம் ஆண்டு இது 57 சதவீதமாக உயரும் என அஞ்சப்படுகிறது.
இவ்வாறு இந்தியாவின் தூண்களான குழந்தைகள், இளைஞர்கள் உட்பட ஒட்டுமொத்த இந்தியர்களின் எதிர்காலத்தை இருண்டகாலமாக மாற்றும் இத்துரித உணவுமுறை குறைக்கப்பட்டு, ஆரோக்கிய வாழ்விற்கு அடிகோலும் பாரம்பரிய உணவுகளுக்கு முக்கியத்துவமளிக்கப்பட வேண்டும்.
“எந்த மனிதனிடம் ஆரோக்கியமிருக்கிறதோ அவனிடம் தன்னம்பிக்கை இருக்கும், தன்னம்பிக்கை இருக்கும் மனிதன் வெற்றி பெறுகிறான்” என்பது தாமஸ் கர்லைல் கூற்று. ஆரோக்கியம் வெற்றியாளர்களின் அறிகுறியாக உள்ளது. எனவே, பாரம்பரிய உணவிற்கு மாறுவோம், ஆரோக்கியம் பேணுவோம், தேசத்தை வலுப்படுத்துவோம்.
இப்படிக்கு
ஊடக தொடர்பாளர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தமிழ்நாடு.
மின்னஞ்சல் மூலமாக
பாப்புலர் ஃப்ரண்ட் LBK
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக