புதுடெல்லி: பசுவை தேசத்தாயாக அறிவிக்கவேண்டும் என்று பா.ஜ.க எம்.பி யோகி ஆதித்யாநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூரில் “ஹிந்து யுவ வாஹினி’ என்ற அமைப்பின் நிகழ்ச்சியில் ஆதித்யநாத் பேசியதாவது:
பசுவை தேசத்தாயாக அறிவிக்கக் கோரும் பிரசாரம் மிகவும் முக்கியமானது. இது அனைத்து இந்தியர்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாகும். சனாதன தர்மத்தில், பசுவுக்கு வணங்கத்தக்க இடம் உள்ளது. விவசாயப் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதில் முக்கியமானது என்பதால், ஹிந்து மதத்தின் முதுகெலும்பாக பசு திகழ்கிறது.
உலகம் முழுவதும் பசுவைப் பாதுகாக்க வேண்டும். எனினும், குறைந்தபட்சம் இந்தியாவில் மட்டுமாவது அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று யோகி ஆதித்யநாத் பேசினார். இந்த நிகழ்ச்சியில், பசு பாதுகாப்பு கோரி செல்ஃபோன்
மூலம் அழைப்பு விடுக்கும் சேவையையும் அவர் தொடக்கி வைத்தார்.
மூலம் அழைப்பு விடுக்கும் சேவையையும் அவர் தொடக்கி வைத்தார்.
கர் வாபஸி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிற மதத்தினரை இந்துமதத்திற்கு மாற்றும் நிகழ்ச்சியை துவக்கி சர்ச்சையை கிளப்பிய யோகி ஆதித்யாநாத், தற்போது புதியதொரு நிகழ்ச்சியை துவக்கி வைத்து சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
நன்றி புதிய விடியல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக