Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 12 ஏப்ரல், 2015

EIFF நடத்திய “நலமான குடும்பம் வளமான எதிர்காலம்” குடும்ப சங்கம நிகழ்ச்சி!

அஜ்மான்: கடந்த 10.04.2015 அன்று  Emirates India Fraternity Forum (EIFF) நடத்திய நலமான குடும்பம் வளமான எதிர்காலம்” (Healthy Family Wealthy Future) குடும்ப சங்கம நிகழ்ச்சி அமீரகத்தில் உள்ள அஜ்மான் ஹபீதத் ஸ்கூலில்  இனிதே நடைபெற்றது.
மாலை 3 மணியளவில் குழந்தைகளுக்கான போட்டியுடன் சிறப்பாக துவங்கியது.
விளையாட்டுப் போட்டிகள் ,கிராஅத் ஓதும் போட்டிகள் ,வினாடி வினா போட்டிகள் ஆகியவை மதியம் 3 முதல் 5 மணி வரை சிறப்பாக நடந்தன.

இதனையடுத்து நல்லதொரு குடும்பம்! பல்கலைக்கழகம் என்ற சொல்லிற்கேற்ப பெற்றோர்களுக்கான கீழ்கண்ட தலைப்புகளின் கீழ் நிகழ்ச்சிகள் நடைபெற்றன:-
1) உங்கள் குடும்பத்தாரின் உடல் நலம் உங்கள் கையிலா? மருத்துவரின் கையிலா?
2) ஆரோக்கியமான அழகிய குடும்பம் அமைந்திட நாம் செய்ய வேண்டியது  என்ன.?
3)இன்பமயமான குடும்பம் என்ற இனிய கனவு நனவாகிட தேவையானவை என்ன.?.  போன்ற அனைத்திற்கும் தீர்வு கிடைக்க இந்நிகழ்ச்சி அமீரக வாழ் தமிழ் முஸ்லிம்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்தது
“குடும்பப் பிணைப்பு” என்ற தலைப்பில் சகோதரர். பொறியாளர் தமீம் மன்சூர் B.E., MBA அவர்கள் சிறப்பாக உரையாற்றினார்கள்.

“குடும்பத்தை ஆரோக்கியமாக மாற்றுவது எப்படி?” என்ற தலைப்பில் சகோதரர். டாக்டர் முஹம்மத் இஸ்மாயீல் B.P.T., M.Sc. (Senior Specialist Therapist, Rashid Hospital, Dubai) அவர்கள் சிறப்பாக பவர்பாய்ண்ட் காட்சி மூலம் விவரமாக எடுத்துரைத்தார்கள்.
“நலமான குடும்பம் வளமான எதிர்காலம்” என்ற தலைப்பில் சகோதரர்  முஹம்மத் ஸாதிக் B.E., PMP, CIMA (London) (Project Manager, GTFS, Dubai) அவர்களின் சுவாரஸ்யமான வகுப்பு நடத்தப்பட்டது.
ஆரோக்கியமான வாழ்வு குறித்த விழிப்புணர்வைப் பெறுவதற்காக அமீரகத்தில் நல்ல பல சமூகப் பணிகளைச் செய்து வரும் Emirates India Fraternity Forum (EIFF) வெகு சிறப்பாக இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தது.
இந்த இனிய மாலை நிகழ்ச்சியில் அமீரகவாழ் தமிழ் முஸ்லிம் குடும்பங்கள் திரளாகப் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்துத் தந்தனர். நிகழ்ச்சியின் முடிவில் வெற்றிபெற்ற குழந்தைகளுக்கு பயனுள்ள பரிசுகள் வழங்கப்பட்டன.      இறைவனின் உதவியால்  இந்நிகழ்சி சீறும் சிறப்புமாக நடந்து நடைபெற்றது .








மின்னஞ்சல் மூலமாக
பாப்புலர் ஃப்ரண்ட் LBK

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக