புதுடெல்லி: மோடி அரசின் அடுத்த இலக்கு ‘தப்லீக் ஜமாஅத்’தை தடை செய்வதை நோக்கி செல்கிறது, முதல் கட்டமாக வெளிநாட்டு ஜமாத்தினர் அனைவரையும் உடனடியாக வெளியேற்றுமாறு மாநிலங்களுக்கு, உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து ‘ஏசியன் ஏஜ்’ பத்திரிகையில் வந்துள்ள செய்திவாது :
‘தப்லீக் ஜமாஅத்’ சேவைக்காக ‘சுற்றுலா விசா’வில் இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டினர் மூலம், மோடி அரசுக்கு பெரும் அச்சுறுத்தல் உள்ளதாகவும் ‘வெளிநாட்டு ஜமாஅத்’துக்களை தீவிர கண்காணிப்பில் கொண்டு வரவேண்டுமென்றும் மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
சாதாரண முஸ்லிம்களை, இஸ்லாமிய கொள்கை கோட்பாடுகளில் நம்பிக்கையுள்ள முஸ்லிம்களாக மாற்றும், தப்லீக் ஜமாஅத்’தின் முயற்சி, இந்திய இறையாண்மைக்கு சவால் விடுவதாக அமையக்கூடும் என்று மாநிலங்களை எச்சரித்துள்ளது, உள்துறை அமைச்சகம்.
வெளிநாட்டு ஜமாத்தினரை அடையாளம் கண்டு அவர்களை உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டியது மாநில அரசுகளின் கடமை என்று உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக ‘ஏசியன் ஏஜ்’ செய்தி, குறிப்பிடுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக