அறிவு, ஆன்மீகம், கலாசாரம் போன்ற அனைத்து மனித விழுமியங்களையும் தலைமுறைகளுக்கு எளிதாக கடத்தும் ஆற்றலை இறைவன் பெண்களுக்கு எளிதாக்கியுள்ளான். அதை அவர்களின் வாழ்வியல் கடமையாகவும் ஆக்கியுள்ளான்.
வளமான அந்த விளை நிலத்திற்கு கூடுதல் பாதுகாப்பும் பராமரிப்பும் தேவை என்பதால் பெண்களுக்கான இஸ்லாமிய வாழ்வியல் சட்டங்கள் சற்று வலிமையாக இருக்கிறது.
குடும்பம் சார்ந்த சமூக கட்டுமானத்தின் மூல வித்தாக திகழும் பெண் சமூகத்தை இஸ்லாமிய வழிகாட்டல் அடிப்படையில் பயிற்றுவித்து உருவாக்கினால் அடுத்தடுத்த தலைமுறை மார்க்கப் பேணுதல் மிக்க உயர்ந்த சமூகமாக உருவாகும் என்பது சமூக உருவாக்கத்திற்கு இறைவன் வகுத்துள்ள ஷரீஅத் விதி.அதை முறையாக செயல் படுத்த வேண்டிய பொறுப்பு சமூகத் தலைமை மீது விதிக்கப்பட்டுள்ளது
கடந்த 70 ஆண்டுகளாக தமிழக முஸ்லிம் சமூகத்திற்கு புகட்டப்பட்ட தவறான கல்வி முறையின் காரணமாக எந்த நோக்கத்திற்காக மனிதன் படைக்கப்பட்டானோ அந்த நோக்கத்தை முறைப்படி அறியாத தலைமுறைகள் உருவாகி வந்து விட்டன
ஷரீஅத் அடிப்படையில் முறையான முஸ்லிம் சமூகத்தை உருவாக்குவதற்கு தமிழக முஸ்லிம்களின் இன்றைய தவறான கல்வி முறையை மாற்றி அமைக்க வேண்டும்.
வாழ்வின் அனைத்தையும் அல்லாஅஹ்வுடைய மார்க்கத்தின் நிழலிலேயே முடிவு செய்யும் இயல்புடைய முஸ்லிம் சமூகத்திற்கு.... சிந்தனைத் திறனைத் தரும் கல்வித் துறையை வடிவமைக்கும் பொறுப்பை.... மதம் சாராத அல்லது வேறு மதம் சார்ந்த ஒரு அரசிற்கோ அல்லது அறிஞர்களுக்கோ வழங்குவது எவ்வளவு பெரிய முட்டாள் தனம் என்பதை சமூகத் தலைவர்கள் சிந்திக்க வேண்டும்.
மார்க்க விழிப்புணர்வு நிகழ்வுகளிலும் சமூகப் போராட்டங்களிலும் அனல் பறக்க ஆர்ப்பாட்டம் செய்யும் சமூக ஆர்வலர்கள் பெற்றெடுத்த பிள்ளைகள் மாற்றுக் கலாசாரத்தை விதைக்கும் பள்ளிகளில் பயிலுவதை கண்கூடாக காண முடிகிறது.
அதை பெருமையாகக் கருதும் ஆடாம்பரத்தை விட அடிமுட்டாள் தனம் வேறு எதுவும் இல்லை.
ஆரம்பப் பள்ளிமுதல் இஸ்லாமியப் பாடத்தை இணைத்தே கற்றுத் தரும் நூற்றுக்கணக்கான இஸ்லாமிய நர்ஸரி பிரைமரி பள்ளிக் கூடங்கள் முஸ்லிம் முஹல்லா முழுவதும் தேவை. போர்க் கால அடிப்படையில் உருவாக்கப்பட வேண்டும்
இந்தப் பள்ளிக்கூடங்களை திறன்பட நடத்துவதற்கு நன்கு பயிற்றுவிக்கப்பட்ட பெண்கள்....., ஆசிரியைகளாக கல்வியாளர்களாக பாடத்திட்டங்களை வடிவமைக்கும் திறன் பெற்றவர்களாக கல்வியியல் ஆய்வாளர்களாக இன்னும் தமிழக கல்வித் துறையில் திறன்மிக்க அதிகாரிகளாக ஆளுமை செலுத்துவதற்கு ஆயிரக்கணக்கான முஸ்லிம் பெண்கள் கல்வித் துறையை நோக்கி உருவாக்கப்பட வேண்டும்.
புதிய கல்வி ஆண்டு துவங்க உள்ள சூழலில்
பெண்களுக்கு தொழில்நுட்ப கல்வியை தேர்வு செய்வதை முஸ்லிம் சமூகம் முற்றிலும் தவிர்க்க வேண்டும். அது ஆண்களுக்கு மட்டுமே பொருந்தும். மற்ற சமூகப் பெண்களுக்கு பொருந்தும் எல்லா படிப்பும் நமது பெண்களுக்குப் பொருந்தாது.அவர்களின் வாழ்வும் அதன் இலக்கும் வேறு நமது வாழ்வும் இலக்கும் வேறு.அறிவு சார்ந்த தத்துவம் சார்ந்த படிப்புகளையே அதிகம் தேர்வு செய்ய வேண்டும்.
எதிர் கால இஸ்லாமிய மறுமலர்ச்சிக்கு வித்திடும் இந்த தொலை நோக்குத் திட்டத்திற்காக உருவாக்கப்பட்ட 3ஆண்டு ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு தான் B.I.S.Ed
(Bachelor Of Islamic School Education).
+2 முடித்தவர்களுக்கு 3 ஆண்டு , 10th முடித்தவர்களுக்கு 5ஆண்டு
அதிகமான நமது பெண் பிள்ளைகளை இந்த பட்டப்படிப்பை தேர்வு செய்ய வைக்க வேண்டும்.
இந்த பட்டப்படிப்பு அம்மாபட்டினம் அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் வழங்கப்படுகிறது. ஒரு பெண் பிள்ளையை படிக்க வைத்து உருவாக்கினால் இன்ஷா அல்லாஹ் உங்கள் ஊரில் ஒரு இஸ்லாமியப் பள்ளிக்கூடத்தை உருவாக்க இயலும். நீங்கள் முயற்சி எடுக்காதவரை உங்கள் பிள்ளைகளுக்கு இஸ்லாமியக் கல்வி என்பது சாத்தியம் இல்லை
அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரி,
இடையாத்திமங்களம் ரோடு,
கணடனிவயல், மணமேல்குடி தாலுகா,
புதுக்கோட்டை மாவட்டம்-614 620
போன் ; 99438 91221 / 7598461650
மின்னஞ்சல்;
இணையதள முகவரி ;
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக