நியூயார்க்: இபோலாவுக்கு மருந்து குரங்குகளில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.வடக்கு ஆப்பிரிக்காவில் இபோலாவால் பாதிக்கப்பட்ட மூன்று குரங்குகளில் டி.கே.எம் இபோலா கினியா என்ற பெயரிடப்பட்ட சோதனை நடத்தப்பட்டது.நோய் பாதிக்கப்பட்ட ஜீன்களில் இருந்து வைரஸ் பரவுவதை தடுக்க இந்த மருந்தால் முடிந்துள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
28 நாட்கள் நீண்ட பரிசோதனையில் மருந்தை செலுத்திய மூன்று குரங்குகளுக்கு நோய் குணமடைந்தது.சிகிட்சை நடத்தாத இதர மூன்று குரங்குகள் ஒன்பது தினங்களில் மரணமடைந்தன.
நேச்சர் பத்திரிகையில் வெளியான இந்த ஆய்வில் பரிசோதனையின் விளக்கம் இடம் பெற்றுள்ளது.டெக்ஸாஸ் பல்கலைக்கழக விஞ்ஞானி தாமஸ் கீஸ்பெர்தின் தலைமையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.ஆனால், இந்த மருந்து மனிதர்களுக்கு பலன் தருமா? என்பது தெரியவில்லை என்று மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இவர்களே நோயை உருவாக்குவார்கலாம் இவர்களே அதுக்கு மருந்தும் கண்டுபிடிப்பார்கலாம் யாரடா ஏமாதுரிங்க
பதிலளிநீக்கு