புதுடெல்லி: நிலம் கையகப்படுத்தும் அவசரச்சட்டம் மறுபிரகடனம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுதொடர்பாக, பாரதிய கிஷான் சங்கம் உள்ளிட்ட சில விவசாய சங்கங்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கு, நீதிபதி கெஹர் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்றுவற்கு அரசுக்கு சாதகங்கள் இருந்தும், மசோதாவிற்கு வேண்டுமென்றே அவசரச் சட்டத்தை பிறப்பித்திருப்பதற்கு தடை விதிக்குமாறு கேட்டுக்கொண்டார். இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், இதுகுறித்து 4 வாரத்திற்குள் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக