மும்பை: மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் வரும் 17ம் தேதி இறைச்சி விற்பனைக்கு விதிக்கப்பட்டிருந்த தடைக்கு இடைக்காலத் தடை விதித்து மும்பை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
இதுதொடர்பாக மும்பை மாநகராட்சியால் பிறப்பிக்கப்பட்டிருந்த உத்தரவை எதிர்த்து ஆட்டிறைச்சி விற்பனையாளர்கள் சங்கத்தினர் தொடர்ந்த மனுவை விசாரித்த, மும்பை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் அனுப் வி. மோத்தா, அஜ்மத் சயாத் ஆகியோரைக் கொண்ட அமர்வு, இறைச்சி விற்பனை உள்ளிட்டவற்றை 2 நாள்களுக்கு தடை விதிப்பது தொடர்பாக கடந்த 2004ம் ஆண்டே மகாராஷ்டிர அரசு விதிகளை கொண்டு வந்திருந்தாலும், அதை இதுவரை முழுமையாக செயல்படுத்தவில்லை. ஆனால், திடீரென அந்தத் தடையை 4 நாள்களாக நீடித்தது ஏன்?
அதேசமயம், வன்முறை கூடாது என்று வலியுறுத்தும் ஜைன மதத்தினருக்காக ஆடு, கோழி இறைச்சிகளுக்கு மட்டும் தடை விதித்துவிட்டு, மீன்கள், முட்டைகளுக்கு ஏன் தடை விதிக்கவில்லை என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக