மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பெயரில் சர்ச்சையை ஏற் படுத்த வேண்டாம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் பொலிட்பீரோ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சமீபத் தில் டெல்லியில் உள்ள அவுரங்கசீப் சாலையின் பெயர் மாற்றம் செய்யப் பட்டுள்ளது துரதிருஷ்டவ சமானது. இதனால் வரலாற்று சிறப்பு வாய்ந்த இடங்கள், சாலைகளை மத காரணங்களுக்காக பெயர் மாற்றம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுகிறது. மேலும் மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பெயரில் மத சர்ச்சையை ஏற்படுத்தக் கூடாது. டெல்லி யில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிதான் இந்த பெயர் மாற்ற முடிவை எடுத்துள்ளது. இதனை திரும்பப் பெற வேண்டும்.
கலாம் பெயரை நிலை நிறுத்த வேறுபல வழிகள் உள்ளன. சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் சாலைக்கு கலாம் பெயரை சூட்டியிருப்பது தவறானது என்று கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக