செப்டம்பர் 15 – அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக சிறைகளில் வாடும் முஸ்லிம் மற்றும் அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும் கருணையின் அடிப்படையில்
பொதுமன்னிப்பில் விடுதலை செய்ய தமிழக அரசை வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடந்த செப்டம்பர் 11 அன்று தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தியது. ஒரே நாளில் நடைபெற்ற இந்த கையெழுத்து இயக்கத்தில் லட்சக்கணக்கான மக்கள் ஆயுள் சிறைவாசிகளின் விடுதலைக்கு ஆதரவாக கையெழுத்திட்டனர். இந்த கையெழுத்து பிரதிகளுடன் அடங்கிய ஒரு கோரிக்கை மனுவை தமிழக அரசிடம் சேர்க்கும் வகையில் இன்று செப்டம்பர் 14, 2015 அன்று தமிழக உள்துறை செயலாளர் அவர்களை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃ ப் இந்தியாவின் நிர்வாகிகள் அடங்கிய குழு சந்தித்து வழங்கியது. அப்போது உள்துறை செயலாளர் அவர்கள் நம்முடைய கோரிக்கை மனுவை ஏற்றுகொண்டு பரிசிலிப்பதாக தெரிவித்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக