திரிபுரா : திரிபுரா மாநில ஆளுநர் டதகட்ட ராய், ”தான் ஒரு மதசார்பற்றவன் இல்லை, ஒரு இந்து” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அருண் நம்பியார் என்ற நபரின் தற்போதைய இந்தியாவின் பாசிச அரசுக்கு எதிரான போராட்டம் என்ற பதிவுக்கு பதில் கூறும் விதமாக டதகட்ட ராய் இந்த கருத்தை பதிவு செய்துள்ளார்.
என் தேசம் ஒரு மதசார்பற்ற தேசமாக இருந்தாலும், நான் ஒரு இந்து என்று பதிவு செய்துள்ளார்.
இதற்கு பதில் அளித்த திரிபுரா மாநில CPM கட்சியின் பொதுச் செயலாளர்
பிஜன் தார் கூறும்போது, ராய் ஒரு பா.ஜ.க. – RSS காரர். அவர்களுக்கு மதசார்பின்மை என்பது இந்துத்துவமே. இது போன்ற கருத்துக்களை பொதுவில் கூறுவது மிகத் தவறான செயல். இவர் இந்திய அரசியல் அமைப்பை இழிவுபடுத்துகிறார். அதே நேரம் பா.ஜ.க. – RSS ன் இந்துத்துவ கொள்கைகளை புகழ்கிறார் என்று குற்றம் சாட்டினார்.
இதே திரிபுர ஆளுநர் தான், இந்திய அரசால் தூக்கிலிடப்பட்ட யாக்கூப் மேமனின் இறுதி சடங்கில் பங்கெடுத்தவர்களை “தீவிரவாதிகள் ஆகும் ஆற்றல் உள்ளவர்கள்” என்று விஷ கருத்துக்களை கூறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக