2002 குஜராத் வன்முறையை நேரில் கண்டவர் நீதியரசர் ஹிமான்ஷு திரிவேதி. ஒரு முஸ்லிமுக்குச் சொந்தமான லாண்டிரியை கலவரக்காரர்கள்
தாக்கிக் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த மோடி அரசின் போலீஸ் வேன் ஒன்று கலவரக்காரகளுக்கு பெட்ரோல் முதலிய எரிபொருட்களை வழங்கி சென்றதைத் தன் வீட்டு மாடியிலிருந்து பார்த்தவர். கலவரத்திற்குப் பின் குஜராத் நீதிமன்றங்கள் எப்படிக் காவிமன்றங்களாக இருந்தன என்பதைப் பார்த்துச் சகிக்கப் பொறாது பதவி விலகியவர் அவர். சில மாதங்கள் வழக்குரைஞராகப் பணியாற்றிய பின் நியூசிலாந்த நாட்டிற்கு இடம் பெயர்ந்தார் திரிவேதி. வெறுப்பு வெறுப்பு எங்கும்முஸ்லிம் வெறுப்பு எப்படிச் சகிப்பேன் என மனம் நொந்து பதவி விலகிய மனச்சாட்சி மிக்க மேன்மையாளர் அவர். டீஸ்டா செடல்வாடை ஆதரிப்பதாக அவர் வெளிப்படையாகச் சொன்னதை ஒட்டி இன்று அவருக்குக் கொலை மிரட்டல்கள்... சென்ற மாதம் அவர் அளித்த நேர்காணல் இது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக