Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 28 செப்டம்பர், 2015

ஹஜ்ஜில் மற்றவரை காப்பாற்றி தனது உயிர் ஈந்த மன்சூரி!


சவுதி அரேபியா மாகாணம் யான்பூவில் மெகானிகல் இன்ஜினியராக வேலை பார்த்து வந்தவர் நியாசுல் ஹக் மன்சூரி. மனைவி மற்றும் மூன்று குழந்தைகளோடு யான்பூவில் வசித்து வந்தவர். இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர். ஹஜ்ஜில் வரும் வெளிநாட்டவருக்கு
உதவி செய்வதில் முன்னணியில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனமான India Fraternity Forum (IFF) ல் அங்கத்தினராக மினாவுக்கு வந்தார். 950 பேர் இவ்வாறு தொண்டு செய்ய வந்திருந்தனர். மினாவில் ஏற்பட்ட நெரிசலில் பல உயிர்களை காப்பாற்றியுள்ளார். ஆனால் தனது உயிரை காப்பாற்ற முடியவில்லை. நெரிசலில் சிக்கி இறந்துள்ளார் மன்சூரி.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் - "நாங்கள் அல்லாஹ்வுக்கு உரியவர்கள். மேலும் நாங்கள் அவனிடமே திரும்பச் செல்பவர்கள்"

இவரது தாயும் தந்தையும் இந்த வருட ஹஜ்ஜூக்கு வந்துள்ளார்களாம். அவர்களை இன்னும் கண்டு பிடிக்க முடியவில்லை. கூட்டத்தில் அவர்கள் எங்கு தவித்துக் கொண்டிருக்கிறார்களோ தெரியவில்லை. இறைவன் இவரது தாய் தந்தையரை நலமுடன் இருப்பிடத்தில் சேர்ப்பிப்பானாக!

மன்சூரி செய்த இந்த செயலுக்கு பெயர்தான் ஜிஹாத். நன்மையை நாடி ஒரு செயலை செய்து அதில் இன்று உயிர் பிரிந்துள்ளது. மன்சூரியின் பாவங்களை இறைவன் மன்னித்து சுவனபதியில் சேர்ப்பானாக! இவரது தாய் தந்தையர் நலமுடன் தங்களின் இருப்பிடத்தை அடைவார்களாக! சிரமத்திற்கு உள்ளாகியிருக்கும் பல லட்சம் ஹாஜிகளுக்கு இறைவன் நன்மையை வாரி வழங்குவானாக!

தகவல் உதவி
சவுதிகெஜட்
27-09-2015

தமிழாக்கம்:சுவனப் பிரியன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக