Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

சிறுபான்மை மாணவிகளுக்கான மௌலான ஆசாத் கல்வி உதவித் தொகை 2015-2016

சிறுபான்மை மாணவிகளுக்கான
மௌலான ஆசாத் கல்வி உதவித் தொகை 2015-2016
***************************************************************************
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30,செப்டம்பர்-2015


விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள்
-----------------------------------------------------------------------------------
சிறுபான்மையினத்தைச் சார்ந்த மாணவிகளாக இருக்க வேண்டும்.
10-ம் வகுப்பில் 55% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
குடும்ப ஆண்டு வருமானம் ரூ.100000(ஒரு லட்சம்)ற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கண்டிப்பாக 11-ஆம் வகுப்பில் சேர்ந்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை
-------------------------------------------------------------------------------------
விண்ணப்பங்களை www.maef.nic.in என்ற இணையதளத்தில் செய்ய பதிவிறக்கம் வேண்டும்.
இதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து தபால் மூலம் அனுப்ப 
வேண்டும்.
MAULANA AZAD EDUCATION FOUNDATION
(ministry of minority affairs,govt.of INDIA)
Social justice service centre, Chelmsford Road,
New Delhi-110055

இணைக்க வேண்டிய ஆவணங்கள்
---------------------------------------------------------------------------------------
பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்.
வருமான சான்றிதழ் நகல்.
சாதிச்சான்றிதழ் நகல்.
மதிப்பெண் சான்றிதழ் நகல்.
Admission Slip நகல்.
கவனிக்கவேண்டியவை
----------------------------------------------------------------------------------------
விண்ணப்பமானது ஆங்கிலம் மற்றும் இந்தி வடிவில் மட்டுமே அமைந்திருக்கும்.
விண்ணப்பங்களை கவனமாக பூர்த்தி செய்ய வேண்டும்.
இணைக்கப்படும் அனைத்து ஆவணங்களும் ஆங்கிலம் அல்லது இந்தி வடிவில் இருக்க வேண்டும்.
தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உதவித்தொகை வழங்கப்படும்.
இரண்டு வருடத்திற்கான(11 மற்றும் 12 ஆம் வகுப்பு) மொத்த உதவித்தொகை ரூ.12000. இது இரண்டு தவணையாக வழங்கப்படும்.

குறிப்பு:விண்ணப்பங்களை நன்றாக படித்துவிட்டு பூர்த்தி செய்யவும்.
மேலும் விபரங்களுக்கு: www.maef.nic.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக