Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 3 ஆகஸ்ட், 2015

டி.எம். உமர் ஃபாரூக் நினைவேந்தல்: பௌத்தமா? இஸ்லாமா?-அ.மார்க்ஸ்

டி.எம். உமர் ஃபாரூக் நினைவேந்தல்: பௌத்தமா? இஸ்லாமா?-அ.மார்க்ஸ்


நேற்று மாலை மறைந்த தலித் விடுதலைப் போராளி டி.எம். உமர் ஃபாரூக் அவர்களுக்கு அவரது சொந்த ஊரும் செயற் களமும் ஆக இருந்த திருப்பனந்தாளில் மிகப் பெரிய நினைவேந்தல் நிகழ்ச்சியை அவரது ‘நீலப்புலிகள்’ இயக்கம் நடத்தியது. நீலப்புலிகள் இயக்கத்தின் புதிய தலைவராக உமர் ஃபாரூக் அவர்களின் மூத மகன் டி.எம்.எம். புரட்சிமணி அவர்கள் அறிவிக்கப்பட்ட நிகழ்வாகவும் அது அமைந்தது. சுற்று வட்டாரங்களில் இருந்து சுமார் 2000 மக்கள் அங்கு உமர் ஃபாரூக் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தத் திரண்டிருந்தனர்.

பேரா.எம்.எச். ஜவாஹிருல்லாஹ், காங்கிரஸ் தலைவர் ஜே.எம் ஹாரூன், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் ரஜினிகாந்த், விடுதலைத் தமிழ்ப் புலிகள் நிறுவனர் குடந்தை அரசன் உட்படப் பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

நான் பேசும்போது தன் இறுதிக் காலத்தில் உமர் ஃபாரூக் ஆக மறுபிறப்பெடுத்த டி.எம்.மணி அவர்கள் தனது 18வது வயதிலிருந்து மறைவதற்கு முதல் நாள் வரை கிட்டத்தட்ட 60 ஆண்டு காலம், தலித் மக்களுக்காகக் கள்த்தில் நின்று போராடியவர் மட்டுமல்ல, தனது போராட்ட அனுபவங்களின் ஊடாகவும் மிக விரிந்த படிப்பறிவின் ஊடாகவும் இந்தியச் சாதிமுறை மற்றும் தலித் விடுதலை குறித்து நிறைய முக்கியமான கருத்துக்களை எழுத்துக்கள் மூலம் தந்துச் சென்றுள்ளவர் என்பதற்கு அழுத்தம் கொடுத்துப் பேசினேன்.
வெறும் மூன்றாவது வகுப்பு வரைமட்டுமே படித்த இவர் அம்பேத்கர் பெரியார் கருத்துக்களை ஆழக் கற்றவர் மட்டுமல்ல அவற்றைத் தன் அனுபவங்களின் ஊடாக உள்வாங்கிக் கோட்பாட்டு உருவாக்கம் செய்தவர். அவரது எழுத்துக்கள் முழுமையாகத் தொகுக்கப்பட வேண்டும் என்றேன்.
வேட்டமங்கலம், காவல்கோட்டம், அண்டக்குடி, குடிதாங்கி, திருப்பனந்தாள், மட்டியூர் முதலான இடங்களில் அவர் நடத்திய போராட்டங்கள் எத்தனை முகியமோ அத்தனை முக்கியம் அந்தப் போராட்டங்களின் ஊடாக அவர் தலித் விடுதலை குறித்து வந்தடைந்த முடிவுகள்.
சட்டையில் அழுக்குப் படாமல் போராடியவர் அல்லர் அவர், தன் போராட்டங்களுக்காக ஆயுள் தண்டனை வரை சென்று வந்தவர். 
தீண்டாமை என்பது இங்கு மதத்தினால், கடவுளின் பெயரால் திணிக்கப்பட்டது. தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்கள் என்பன தலித் விடுதலையில் இரண்டாம் பட்சமான ஒரு நடவடிக்கையே. எந்தக் கடவுளால் தீண்டாமை இங்கு திணிகப்பட்டதோ அந்தக் கடவுளை மாற்றுவது ஒன்றுதான் தலித் மக்கள் தீண்டாமையிலிருந்து விடுபடுவதற்கான ஒரே வழி எனச் சொன்னவர் அவர். அம்பேத்கரும் பெரியாரும் சொன்ன வழி இது என்பதோடு அவர் நிறுத்திக் கொள்ளவில்லை.

அம்பேத்கர் முதலில் இஸ்லாமாகத்தான் முடிவெடுத்தார். ஆனால் அனறைய அரசியல் சூழலும் அரசியல் தலைவர்களும் அவருக்குக் கடும் நெருக்கடி கொடுத்து சீக்கியம் மற்றும் பவுத்தத்தை நோக்கித் தள்ளினர்.
ஆனால் பவுத்தம் தலித் மக்களுக்குத் தீண்டாமையிலிருந்து விடுதலை அளிக்கவில்லை என்பதையும் உமர் ஃபாரூக் தன் எழுத்துக்களில் நிறுவினார் என்றேன்.
ஊருக்குச் செல்ல வேண்டி இருந்ததால நான் முன்னதாகப் பேசி விட்டுப் புறப்பட்டேன்.
நான் சென்ற பின் பேசிய வழக்குரைஞர் ரஜினிகாந்தும், நண்பர் திருவள்ளுவனும் உமர்ஃபாரூக் அவர்கள் இஸ்லாத்திற்குச் சென்றிருக்கக்கூடாது, பவுத்தத்திற்குத்தான் சென்றிருக்க வேண்டும் எனப் பேசியதாகச் சொன்னார்கள்.
ஏன் பவுத்தத்திற்குச் செல்வது இங்கு பலனளிக்காமல் இருக்கிறது? ஏன் இஸ்லாம் மட்டுமே தீண்டாமையிலிருந்து விடுதலை அளிக்கும் சக்தி வாய்ந்த்தாக இருக்கிறது என்பதற்கும் உமர் ஃபாரூக் அவர்கள் மிகவும் ஆணித்தரமாக விடை அளித்துள்ளார்.
இது குறித்து டி.எம்.உமர் ஃபாரூக் பற்றிய எனது நூலில் நான் குறிப்பிட்டுள்ளது கீழே:
“இப்படி பவுத்தத்திற்கு மாறியது குறித்து ‘சாதி ஒழிந்தது’ எனும் நூலில் மணி கூறுவது:
‘அம்பேத்கரின் அறிவுறையைக் கேட்டு மதம் மாறியவர்கள் மிகவும் 
சிறுபான்மை ஆனார்கள். மதமாற்றத்தின் மூலம் கூடுதல் ப;லம் பெற முடியும் என்கிற அம்பேத்கரின் கொள்கைக்கு மாறாக (உண்மையில் நடந்தது என்னவெனில் அம்பேத்கரின் அறிவுரையை ஏற்று) மதம் மாறிய பௌத்தர்கள் செயலற்றுப் போனார்கள். உதாரணமாக பெரியவர் சுந்தர்ராஜன், டாக்டர் சேப்பன், சக்திதாசன் போன்றவர்களை எடுத்துக் கொள்ளலாம். தற்பொழுது வி.டி.ராஜசேகர், பெரியார்தாசன் போன்றவர்கள் தன்னை பவுத்தர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். 
தனி மனிதனாக இவர்கள் தன்னை இந்து அல்ல என சொல்லிக் கொள்ள முடியும். (ஆனால்) இவர்களை ஆதரிக்க, அரவணைக்க, ஒன்றிணைந்து குரல் கொடுக்க, போராட, பெண் கொடுக்க, பெண் எடுக்க, ஒன்றிணைந்த கூட்டு வாழ்க்கைக்கு யாரோடு சேர்ந்து நிற்பார்கள்? தன்னை இந்து இல்லை என்று சொல்லிக் கொண்டால் போதுமா? மானுடத்தில் இணைந்திட வேண்டாமா? மதமாற்றம் என்பது பெயரை மாற்றிக் கொள்கிற விஷயமல்ல. மதமாற்றம் என்பது சமுதாயத்தில் கூட்டு வாழ்க்கைக்கு உதவுவதாக இருக்க வேண்டும். அதை விட்டு மேலும் மேலும் தன்னைத் தனிமைப் படுத்துவதாக இருக்கக் கூடாது’ (பக்.74). 
கடவுளை மாற்றுவோம்’ எனும் குறு வெளியீட்டில் இதை இன்னும் வெளிப்படையாகச் சொல்லி விடுகிறார். ‘நான் பவுத்தன் என்று பெயரளவில் சொல்லிவிட்டு, இந்துக் கோயில்களை வணங்கிக் கொண்டு, இந்துப் பண்டிகைகளைக் கொண்டாடிக் கொண்டு, இந்து சாஸ்திர சம்பிரதாயங்களைப் பின்பற்றிக் கொண்டு’ இருக்கும் நிலைக்குத்தான் இங்கு பவுத்த மாற்றம் கொண்டு விடும்.

அப்படித்தான் நடந்தது. முதல் தலைமுறையில் பவுத்தத்திற்கு மாறிய பலரது அடுத்த தலைமுறைகள் மீண்டும் இந்து மதத்திற்குத் திரும்பியுள்ளதுதான் எதார்த்தம். நிறைய பவுத்த மதமாற்றங்களைச் செய்த பெரியவர் ஒருவரை ஒருமுறை நண்பர் அயன்புரம் ராஜேந்திரன் அறிமுகம் செய்து வைத்தார். ‘உங்களால் பவுத்தம் வந்தடைந்தவர்கள் தங்களின் மதக் கடைமைகளைச் செய்ய, கடவுளை வணங்க எங்கு போகிறார்கள்?’ என நான் கேட்டபோது அவர் சோர்ந்து போனார். ‘அதுதான் சார் எங்களுக்குப் பிரச்சினை. இங்கே புத்த கோவிலே கிடையாது. எல்லாத்துக்கும் சென்னை வந்து கென்னத் லேனுக்குத்தான் போகணும்.’.
இது ஒரு முக்கியமான நடைமுறைப் பிரச்சினை. பவுத்தத்தில் கடவுள் என்கிற கருத்தாக்கமே இல்லை என்றெல்லாம் தத்துவம் பேசிக் கொண்டிருக்க முடியாது. மனிதர்கள் சமூகப் பிராணிகள். குழந்தை பிறந்தால், அல்லது ஒருவர் இறந்தால், ஒரு திருமணம் நடந்தால் அவற்றை ஏதோ ஒரு வகையில் புனிதப்படுத்துதல் (solemnize) சமூக வாழ்வில் அவசியமாகிறது. சமூகம் முழுமைக்கும் அரசியல் தெளிவு ஏற்படாத வரைக்கும் இது ஒரு பிரச்சினைதான்.
ஆக இந்துமதத்தை விட்டுப் போவது என்பதுதான் தலித்களுக்குள்ள ஒரே வழி. ஆனால் அப்படிப் போகும் இடம் ஒருவரை மேலும் தனிமை ஆக்கிவிடக் கூடாது. முழுமையான சமூக வாழ்க்கைக்கு அது இடமளிக்க வேண்டும். பவுத்தம் அதைச்சாதிக்காது என்பதுதான் முடிவாக மணி எனப்பட்ட இமர் ஃபாரூக் சொல்லும் சேதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக