இன்றைய கால கட்டத்தில் மரியாதைக்குரிய உறவுள்ள தம்பதியர்கள் தங்களுடைய வேலையின் காரணமாக தங்களுக்குள் நல்ல உறவு மற்றும் அன்பை பகிர்ந்து கொள்ள நேரம் இல்லாமல் உள்ளனர்.
தொடர்பு இன்மையால் நிறைய விவாதங்கள் மற்றும் கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்றன.
தம்பதியருக்குள் ஏற்படும் வாதங்கள், சண்டைகள் மற்றும் முன்னும் பின்னுமாக பேசுவது போன்றவற்றை அவர்களுடைய திருப்தியான உறவு முறையால் மட்டுமே தவிர்க்க முடியும். யாராவது ஒருவர் விட்டுக்கொடுப்பது.
பிரச்சனையை நல்ல வழியில் மாற்றி செலுத்த உதவுகிறது. தனிப்பட்ட வேலையால், தம்பதியர் சேர்ந்து சாப்பிடுவதற்கு கூட நேரம் இல்லாமல் இருப்பதால், உங்கள் உறவு மற்றும் தொடர்பு பெரிதும் பாதிக்கப்படுகிறது.
நீங்கள் வெளியிலேயே அதிக நேரம் செலவிடுதலால்,உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டு, உங்கள் உறவு முறை பாதிக்கப்படுகிறது.
இதனால் யாராவது ஒருவர் முதிர்ச்சியுடன் கவனமாக செயல்பட்டு இந்த மாதிரியான கஷ்டமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டும். வாரத்திற்கு ஒரு முறையாவது நேரம் ஒதுக்குவதன் மூலமும், வெளியில் அழைத்து செல்வதன் மூலமும் உங்களுக்குள் இருக்கும் இடைவெளியை நல்ல வழியில் சரி செய்ய வேண்டும்.
நம்முடைய உணர்வுகள் மற்றும் எண்ணங்கள் ஆகியவற்றை வெளிப்படையாக உங்கள் துணையிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். .நீங்கள் உங்கள் துணையிடம் ஒவ்வொரு நாளும் உங்கள் நாள் கழிந்த விதத்தையும், நீங்கள் வேலை செய்த இடத்தில் நடந்த சம்பவங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
நீங்கள் உங்கள் துணையிடம், உங்கள் எண்ணங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்துவதில் நேர்மை இல்லா விடில், உங்கள் உறவிற்கு எந்த மதிப்பும் இல்லை. எனவே உண்மை எவ்வளவு கசப்பாக இருப்பினும், கடினமான விஷயமாக இருப்பினும் உண்மையை கூறுவதும், நேர்மையாய் இருத்தலும் மிகவும் முக்கியமானது.
உங்கள் துணையிடம் பேசும் போதும், அவர்கள் கூறுவதை கேட்கும் போதும் கவனத்துடன் செயல் பட வேண்டும். உங்களுடைய துணை பேசும் போது, அவர்கள் பேசுவது உங்களுக்கு பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் அவர்கள் பேசுவதை பொறுமையாக கேட்க வேண்டும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக