குருதியை விற்றுப் பிழைக்கும் இந்துத்வா அரசு!
மோடியின் குஜராத் மாநிலத்தில் இயங்கி வரும் அரசு இரத்த வங்கி சேமித்த ரத்தத்தை தனியாருக்கு விற்று கோடிக்கணக்கில் லாபம்பார்த்துள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
1. 2011 லிருந்து 2014 வரை 10 அரசு இரத்த வங்கிகள் 52000 லிட்டர் இரத்தத்தை 6.17 கோடிக்கு தனியாருக்கு விற்றுள்ளது. தேசிய இரத்த சேமிப்பு மையமோ இவ்வாறு தனியாருக்கு விற்பதை சட்ட விரோதமாக்கியுள்ளது. ஆனால் இந்துத்வா அரசுக்கு சட்டமெல்லாம் கால் தூசுக்கு சமமல்லவா?
2. தலசீமியா, ஹீமோபிலியா நோய் தாக்கிய நோயாளிகளிடமிருந்தும் உயிர் பிரியும் தருவாயிலுள்ள அவசர கேஸ்களிடமிருந்தும் இரத்தத்திற்காக எந்த கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்று அரசு ஆணை உள்ளது. ஆனால் 2011 லிருந்து 2014 வரை 5747 யூனிட் ரத்தத்தை விற்று 19.61 லட்சம் பணமாக பெறப்பட்டுள்ளது. கணக்கில் வந்ததுதான் இது. கணக்கில் வராதது இன்னும் எத்தனை லட்சங்களோ!
3. 32 இரத்த வங்கிகளில் நடந்த சோதனையில் 7 ரத்த வங்கிகள் ஹெச்ஐவி நோயாளிகளிடமிருந்து நிர்ணயிக்கப்பட்ட தொகைக்கு அதிகமாக விற்கப்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
4. 82 கோடிக்கு 3.14 லட்சம் யூனிட் ரத்தத்தை அநியாய விலைக்கு விற்று காசாக்கியுள்ளனர்.
5. குஜராத்தில் உள்ள 136 இரத்த வங்கிகளில் பெரும்பாலானாவை அடிப்படை வசதிகளே இல்லாமல் உள்ளன. 73000 யூனிட் ரத்தமானது எவருக்கும் பயனளிக்காமல் வீணாக்கப்பட்டுள்ளது.
6. ஐந்து வருடத்துக்கு ஒரு முறை இரத்த வங்கிகளின் உரிமம் புதுப்பிக்கப்பட வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக பல ரத்த வங்கிகள் உரிமம் இல்லாமலேயே இந்துத்வாவாதிகளின் ஆசியோடு நடந்து வருகின்றன.
மோடியின் தலைமையில் உள்ள இந்துத்வா ஆட்சி சாமான்யனுக்காக உழைக்கவில்லை. அம்பானி, அதானி போன்ற பண முதலைகள் மேலும் பணக்காரர்கள் ஆவதற்குத்தான் இந்துத்வா அரசு மறைமுகமாக வேலை செய்கிறது. நில கையகப்படுத்தும் சட்டத்திலிருந்து கேஸ் மான்யத்தை விட்டுத் தர வேண்டும் என்று மோடியே கேட்பது வரை இவர்கள் பண முதலைகளுக்காகவே உழைக்கிறார்கள்.
அப்பாவி இந்துவோ மோடியினால் தனக்கு வளமான எதிர்காலம் வந்து விட்டது என்ற தவறான பிம்பத்தில் அமர வைக்கப்பட்டுள்ளார். பல் முகம் கொண்ட நமது பாரத தேசத்தில் இந்துத்வாவின் செல்வாக்கு என்று சரிகிறதோ அன்று தான் நமது நாடு முன்னேற்ற பாதையில் அடியெடுத்து வைக்கும். அதற்கான அறிகுறிகள் தற்போது தெரிய ஆரம்பித்துள்ளன.
தகவல் உதவி
தி லாஜிகல் இந்தியன்.காம்
26-08-2015
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக