மும்பை: பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்றால், இந்துக்கள் மனித வெடிகுண்டாகவும் மாற வேண்டும் என்று சிவசேனா தெரிவித்துள்ளது.
1992 டிசம்பர் 6ல் பாபரி மஸ்ஜித் ஃபாசிச பயங்கரவாதிகளால் இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து 1992 டிசம்பரிலும், 1993 ஜனவரியிலும் மும்பையில் முஸ்லிம்களுக்கெதிரான படுகோரமான இனப்படுகொலைகள் நடந்தன. இதனை முன்னின்று நடத்தியவர் பால்தாக்கரே. இவரது சிவசேனா குண்டர்கள்தான் முஸ்லிம்களைப் படுகொலை செய்தும், முஸ்லிம் பெண்களைக் கற்பழித்தும், முஸ்லிம்களின் சொத்துகளைச் சூறையாடியும் அழிச்சாட்டியம் புரிந்தனர்.
இது குறித்து பால்தாக்கரேயை விமர்சித்து சமீபத்தில் வார இதழ் ஒன்றில் கட்டுரை வெளியானது. இது சிவசேனா குண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, அவர்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினார்கள். மும்பை நரிமன் பாயிண்ட் பகுதியில் அமைந்துள்ள அந்த வார இதழ் நிறுவனம் முன்பு திரண்டு மிரட்டல் விடுத்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், இதற்கு பதில் அளிக்கும் வகையில் சிவசேனா கட்சி நேற்று அதன் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வில் தலையங்கம் வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:
பால்தாக்கரே மீது மக்கள் மிகுந்த மரியாதையும், அன்பும் வைத்திருக்கிறார்கள். அவருடைய தேசிய கொள்கையை எண்ணி மக்கள் பெருமைப்படுகிறார்கள். இந்துக்களுக்கான பயத்தை மக்கள் மத்தியில் விதைத்தவர், பால் தாக்கரே. இந்துக்கள் இந்த நாட்டில் பெருமையுடன் நடை போட வேண்டும்.
மேலும் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்றால், நாம் மனித வெடிகுண்டாகவும் மாற வேண்டும். அவர்கள் மீது படையெடுத்து செல்லவும் தயாராக இருக்க வேண்டும். அனைத்து மதங்களையும் சமமாகவே பால்தாக்கரே கருதினார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலையை தொடர்ந்து, மாநிலத்தில் அமைதி நிலவுமாறு அறைகூவல் விடுத்தவர், பால் தாக்கரே.
அவரால் தான் சீக்கியர்கள் மும்பையிலும், மராட்டியத்தின் மற்ற பகுதிகளிலும் அமைதியாக வாழ முடிகிறது.
இவ்வாறு சாத்தான் வேதம் ஓதுகிறது என்று சொல்கின்ற வகையில் அதில் கூறப்பட்டு இருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக