Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 1 ஆகஸ்ட், 2015

வாழ்க ஃபலஸ்தீன்! வாழ்க இந்தியா! (‘ஹமாஸ் இயக்க முன்னோடி- காலித் மிஷ்அல்’ – நூல் விமர்சனம்)

இந்திய முஸ்லிம்கள் அடக்கு முறைகளை சந்திக்கிறோம். ஒடுக்கப் படுகிறோம். ஃபாசிச பயங்கரவாதத்தால அல்லல்களுக்கு ஆளாகிறோம். இப்போது அரச பயங்கரவாதமும் கட்டவிழ்த்து விடப்படுகிறது. முஸ்லிம்களை படுகொலை செய்து அதன் மூலம் ‘இகழ் புகழ்’ அடைந்தவர் அதையே மூலதனமாக்கி நாட்டின் பிரதமராகி விட்டார். ஒட்டு மொத்த நாடும் ஃபாசிசத்தின் பிடியில்.
இந்திய முஸ்லிம்களுக்கு எவ்வளவு பெரிய சோதனை, நெருக்கடி என்றெல்லாம் நம் மனம் சோர்ந்திடுமானால் நாம் ஃபலஸ்தீன முஸ்லிம்களின் மீது கவனத்தை திருப்புவது நல்லது. ஏன்? அந்த வரலாறுகளை படித்தால், அவர்கள் சந்திக்கும் சோதனைகளை படித்தால், அந்த சோதனைகள் வேதனைகள் முன் நமது சோதனைகள் ஒன்றுமே இல்லை என்று தெரிய வரும். அவர்கள் சந்திக்கும் எதிரிகளின் முன் நமது எதிரிகள் சிறு தூசியென, துச்சமென தெரிய வரும்.

அந்த ஃபலஸ்தீன முஸ்லிம்களின் வரலாற்றை தமிழ் கூறும் நல்லுலகிற்கு அறிமுகப் படுத்தும் பணியை தமிழ் முஸ்லிம் இதழியல் தொடர்ந்து செய்து வருகிறது. ‘விடியலும்’ ‘இலக்கியச் சோலையும்’ அதில் முன்னணியில் நிற்கிறது. தொண்ணூறுகளில் ‘விடியலில்’ வந்த ‘ஃபலஸ்தீன முஸ்லிம்கள் அகதிகளான வரலாறு’ என்ற கட்டுரை அன்றைய இளைய தலைமுறையினரின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றது. பின்னர் நூல் வடிவம் கண்டது (ஆசிரியர் குலாம் முஹம்மது).
பின்பு ஒரு ‘பூகம்பம்’ வந்து  தமிழ் வாசக உலகை உலுக்கியது. ‘மொஹன்திஸ்’, ‘இஞ்சினீயர்’ என்றெல்லாம் அழைக்கப் பட்ட ‘ஷஹீத் யஹ்யா அய்யாஷ்’ அவர்களின் வாழ்க்கை வரலாற்றை ஒரு அழகுப் புதினமாக்கி நம் கைகளில் தவழ விட்டார் இலங்கையை சேர்ந்த எழுத்தாளர் ஆஸிம் அலவி அவர்கள்.
அந்த வரிசையில் இப்போது வந்துள்ள நூல் சகோதரர் B.ரியாஸ் அஹமது M.B.A எழுதியுள்ள ‘ஹமாஸ் இயக்க முன்னோடி – காலித் மிஷ்அல்’.
காலித் மிஷ்அல் – பெயரைப் போலவே அன்னாரது வரலாறும் வசீகரமாக உள்ளது. இவர் ஒரு போராளி. அதிலும் நாடு கடத்தப் பட்டவர். தலை மறைவாக உள்ளவர். இவரைப் பற்றிய செய்திகள் வெளி உலகிற்கு குறைவாகவே தெரிந்த வேளையில் இவரை உலகின் கவனத்திற்கு, வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது ஒரு நிகழ்வு.
அந்த சம்பவமும் பிறகு அடுத்ததடுத்து வரும் திருப்பு முனைகளும் இந்த நூலில் சொல்லப் பட்டிருக்கும் விதம் நம்மை சிலிர்க்க வைக்கும். எந்த ‘Action Thriller’ திரைப் படத்திற்கும் குறைவில்லாத விறுவிறுப்பு கொண்டது. ஆமாம். திரைப் படங்களில் மட்டுமே நாம் பார்க்கும் கதாநாயக சாகசங்கள் ஃபாலஸ்தீன போராட்டக் களங்களில் சர்வ சாதாரணம். அதிலும் காலித் மிஷ்அல் போராளி மட்டுமல்ல, போராளிகளின் தலைவர். நமது நிஜ கதாநாயகர்.
இஸ்ரேல். அதை இயக்கும் சியோனிசம். அது ஆக்கிரமித்து வைத்திருக்கும் புனித பூமி. அதன் மூளையாக செயல்படும் மொசாத். அதற்கு உறுதுணையாக நிற்கும் உலக வல்லரசு நாடுகள். இவற்றிக்கெதிராக களம் காணும் ஃபாலஸ்தீன போராளிகள்.
அதிலும் மொசாத் என்றால் உலகமே அகல விழி விரித்துப் பார்க்குமாம். அத்தனை அறிவையும் இவர்கள் தான்  குத்தகைக்கு எடுத்திருக்கிறார்களாம். இவர்களை ஜெயிக்கவே முடியாதாம். இந்த மொசாத்தின் சித்து விளையாட்டுகளும் நரித்தனங்களும்  ‘ஹமாஸ்’ திருக் கூட்டம் முன்பு செல்லாக் காசாகும் சம்பவங்களை இந்த நூலில் நாம் படிக்கும் போது  இங்கே அலப்பரை செய்யும் ஹிந்துத்துவ ஃபாசிஸ்டுகள் நமக்கு சில்லுண்டிகளாக தெரியும் எண்ணம் எழுவதை நாம் தவிர்க்க முடியாது.
இந்த நூலை படித்து முடித்தவுடன் நமக்கு ஏற்பட்ட ஆதங்கம், இந்த நூல் அதன் இலக்கை அடைந்ததா? இந்த நூல் முஸ்லிம்களிடம் மட்டும் சுற்றிக் கொண்டிருக்கும் நூலல்ல. அடக்கு முறைகளுக்கு எதிராக களமாடும் எந்தவொரு இயக்க உறுப்பினர்களும் படிக்க வேண்டிய நூல்.
ஃபாசிசம் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கும் இந்த நாள்களில் ஒருப் போராளியின் வாழ்கையை மைய்யமாக கொண்டிருக்கும் இந்த நூல் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இது பரவலாக்கப் பட வேண்டும். இதன் அடுத்த பதிப்பின் முன்னுரையை ஒரு முன்னணி திரைப்பட இயக்குனரும், அணிந்துரையை ஒரு முன்னணி எழுத்தாளரும் எழுத வேண்டும் என்பது நம் அவா.
ஃபாலஸ்தீனதிற்கும் இந்தியாவிற்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. பைத்துல் முகத்தஸ் – பாபரி மஸ்ஜித், அல்லாஹ் திருமறையில் சுட்டிக் காட்டும் முஸ்லிம்களின் மீது கடும் பகை காட்டும் கூட்டத்தினர், அவர்கள் ஆட்சிப் பொறுப்பின் கீழ் முஸ்லிம்கள் சந்திக்கும் அவலம், அதற்கெதிரான போராட்டக் களம்…
போராட்டம் வெல்லட்டும் நீதி நிலைக்கட்டும். வாழ்க ஃபலஸ்தீன். வாழ்க இந்தியா.
- முஹம்மது ஃபைஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக