Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 10 ஆகஸ்ட், 2015

அமீரகம் செல்லும் மோடி – இஸ்ரேல் பயணத்தை சரிகட்டவா?

புதுடெல்லி: கடந்த ஓராண்டில் அமெரிக்கா, சீனா, ரஷியா, பிரேசில், பிரான்சு, ஜெர்மனி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நரேந்திர மோடி, 2 நாள் சுற்றுப்பயணமாக  வருகிற 16–ந்தேதி அமீரகம் செல்கிறார்.
இந்த சுற்றுப்பயணத்தின் போது அமீரக தலைவர்களுடன் இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தம், பாதுகாப்பு மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். அங்கு வசிக்கும் இந்தியர்கள் கலந்து கொள்ளும் கூட்டத்திலும் பேசுகிறார்.

அமீரகத்தில் அதிக அளவில் இந்தியர்கள் வசிக்கிறார்கள். இந்தியாவின் ஏற்றுமதி பங்களிப்பில் அமீரகம் 2–வது இடத்தில் உள்ளது.
பிரதமர் மோடி அமீரகத்தில் 16–ந்தேதி தொடங்கி 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பது பற்றிய தகவலை துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்து உள்ளது. அதில், அமீரகம் வரும் இந்திய பிரதமரை வரவேற்க இந்திய சமூகத்தினர் சார்பில் இந்திய சமூக நல கமிட்டி சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும், 17–ந்தேதி மாலை துபாய் கிரிக்கெட் மைதானத்தில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டு உள்ளது.
இந்திய பிரதமர் ஒருவர் அமீரகத்துக்கு செல்வது 34 ஆண்டுகளுக்கு பிறகு இதுவே முதல் முறை ஆகும். இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது கடந்த 1981–ம் ஆண்டு அமீரகத்துக்கு சென்றார். அதன் பிறகு பிரதமர் மோடி இப்போது அங்கு செல்ல இருக்கிறார்.
பிரதமர் மோடியின் துபாய் சுற்றுப்பயணம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை முழு விவரங்களுடன் மத்திய அரசு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்ரேலுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் மோடி, அதனை சரி கட்டவே அரபு நாடுகளுக்கு பயணிக்கிறார் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக