அதற்கான காரணம் என்ன என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கு இந்த பதிவில் சில தகவலை தருகிறோம்...
2) மனிதனுக்கு கடவுள் அம்சம் உண்டு என்று சொல்லி போலி சாமியார்கள் உருவாக காரணமாக இருந்து விட்டு அவர்கள் மாட்டிக்கொண்டு விட்டவுடன் முகத்தில் காரி உமிழ்ந்து விட்டோம் என்று சொல்லும் பேச்சுக்கே வாய்ப்பளிகாத மார்க்கம்.
3) பெண்கள் எப்பொழுதும் தீட்டு அதனால் ஆலயங்களுக்கு வரக்கூடாது என்று சொல்லாத மார்க்கம்.
4) கணவனை இழந்த பெண்கள் உயிர் வாழக் கூடாது என்று சொல்லி அவர்களை உடன் கட்டை ஏற்றி உயிரோடு கொழுத்த சொல்லாத மார்க்கம்.
5) மாதாவிடாய் பெண்களை வீட்டுக்கு தூரம் என்று ஒதுக்கி துன்புறுத்தாமல் அது ஒரு உபாதை என்று மருத்துவ பாடம் எடுக்கும் மார்க்கம்.
6) குறி சொல்பவனையும், ஜோசியக்காரனையும் நம்பச் சொல்லி பெற்ற குழந்தையையே நரபலி கொடுக்கவும் கன்னிப் பெண்களுக்கு அந்த தோசம் இந்த தோசம் என்று அவர்களின் திருமண ஆசையை குழி தோண்டி புதைத்து அவர்கள் இதனால் உயிரை மாய்த்துக்கொள்ளும் நிலைக்கு கொண்டு செல்லாத மார்க்கம்.
7) அகில உலகங்களையும், அண்ட சராசரங்களையும் அதிலுள்ள அனைத்தையும் படைத்த சர்வ வல்லமையுள்ள இறைவனுக்கு கற்பனை உருவம் கொடுத்து கடவுளின் வல்லமையை அசிங்கப்படுத்தாத மார்க்கம்.
8) அனைத்தையும் அடக்கியாளுகின்ற இறைவனுக்கு மனைவி மக்கள் குழந்தை குட்டி குடும்பம் தாம்பத்தியம் என்று கற்பனையாக கதைகள் புனைந்து மனிதனின் பலகீனம் போல் கடவுளுக்கும் உண்டு என்று சொல்லாத மார்க்கம்.
9) பூஜை புனஸ்காரம் அபிஷேகம் என்று உணவில்லாமல் கஷ்டப்படும் ஏழைகளுக்கு கிடைக்க வேண்டியதை கடவுளின் பெயரால் மந்திரித்த கற்களுக்கும் சிலைகளுக்கும் வீணடிக்கச் சொல்லாத மார்க்கம்.
10) பக்தியின் பெயரால் எதைச் சொன்னாலும் அது அறிவிற்கும் அறிவியலுக்கும் முரணாக இருந்தாலும் அதை அப்படியே கண்ணை மூடி நம்ப வேண்டும் என்று சொல்லி மனிதனை முட்டாளாக்காத மார்க்கம்.
11) மரணத்திற்கு துல்லியமான சுயமரியாதையை இழந்து மனிதன் தனக்குத்தானே கேவலப்படும் விதமாக மண் சோறு உண்ணவும் மாட்டு மூத்திரம் குடிக்கவும் சொல்லாத மார்க்கம்.
12) பூசாரிகள் வாயில் பழம் வைத்து அதை பெண்களுக்கு ஊட்டினால் (ச்சீ நினைத்துப் பார்க்கவே முடியவில்லை) குழந்தைப் பாக்கியம் உண்டாகும் என்று பெண்களை கேவலப்படுத்தாத மார்க்கம்.
13) மனிதனை மனிதன் வணங்கச்சொல்லி (சிறியவர்கள் பெரியவர்கள் காலில் விழுவது) அவர்களின் சுயமரியாதையையும் தனித்தன்மையையும் இழக்கச் செய்யவும் இதனைக்கொண்டு ஏற்றத்தாழ்வு ஏற்படவும் காரணமாக இல்லாத மார்க்கம்.
14) பக்தி எனும் பெயரில் கண்டதையும் கேட்டதையும் அப்படியே நம்பிச் செயல்பட வேண்டும் என்று சொல்லாத மார்க்கம்.
15) மூட நம்பிக்கைகளையும் முட்டாள்தனங்களையும் மூலதனமாகக் கொள்ளாத மார்க்கம்.
16) கல்லையும் மண்ணையும் கண்ணில் கண்ட புற்பூண்டுகளையும் கடவுள் எனச் சொல்லாத மார்க்கம்.
17) பரிகாரம் சாங்கியம் சம்பிரதாயம் எனும் பெயர்களில் பொருளாதாரத்தை வீணடிக்கச் சொல்லாத மார்க்கம்.
18) வாஸ்துவைப் பிடித்துக் கொண்டு வாசலை அங்கு வைப்பதா இங்கு வைப்பதா என்று குடும்பத்தில் குழப்பத்தை உண்டாக்காத மார்க்கம்.
19) பண்டிகை எனும் பெயரில் காசைக் கரியாக்கவும் பிறருக்கு இடைஞ்சல் செய்வதையும் விரும்பாத மார்க்கம்.
20) ஆடை சுதந்திரத்தின் பெயரில் பெண்கள் கண்ணியத்தை இழந்து திரிவதை ஏற்றுக் கொள்ளாத மார்க்கம்.
21) பெத்தவன் வைத்த பெயரை பேராசை பிடித்து நியூமராலஜி என்று சொல்லி மாற்றி தனக்குத்தானே ஏமாறுவதை ஏற்றுக்கொள்ளாத மார்க்கம்.
22) கருவறையில் இருக்கும் வரை கடவுளென்றும் திருட்டு போய்விட்டால் சிலை திருட்டுப்போய் விட்டது என்று காவல்துறையிடம் புகார் கொடுக்கும் அவல நிலை ஏற்பட வாய்ப்பளிக்காத மார்க்கம்.
23) கடவுளுக்கு எதனையும், எவரையும் இணையாக்கும் மாபாதகச் செயலுக்கு சற்றும் அனுமதியளிக்காத மார்க்கம்.
24) அனைத்தையும் படைத்த இறைவன் மட்டுமே உயர்ந்தவன் மற்ற அனைத்தும் அவனுக்கு அடிமையே எனும் தூய கோட்பாடுக்கு எவ்விதத்திலும் களங்கம் ஏற்படுத்த அனுமதிக்காத மார்க்கம்.
25) பெண்ணடிமைத்தனத்தை அடியோடு எதிர்த்து பெண்ணியம் காக்கும் மார்க்கம்.
27) வட்டி,வரதட்சனைக்கு துளிகூட இடம் தராத மார்க்கம்.
28) சத்தியத்தையும் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் சமாதானத்தையும் (மட்டுமே) போதிக்கும் மார்க்கம்.
29) சாதியின் பெயரால் பெரியவன், தாழ்ந்தவன் என்று ஏற்றதாழ்வுகளை கற்பிக்காத மார்க்கம்.
30)அன்பாளன் அருளாளன் அல்லாஹ்வின் அழகிய மார்க்கம். இன்னும் ஏராளம் ஏராளம்...
நன்றி : முஹம்மது நியாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக