Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 1 ஆகஸ்ட், 2015

தமிழ்நாட்டில் புதிதாக பணியில் சேர்ந்த 9 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு இஸ்ரேல் நாட்டில் பயிற்சி

சென்னை, ஆக.1- தமிழக போலீஸ் துறையில் புதிதாக பணியில் சேர்ந்துள்ள 9 ஐ.பி.எஸ். அதிகாரிகள், தீவிரவாதத்தை ஒழிப்பது தொடர்பாக அதி நவீன பயிற்சிபெற இஸ்ரேல் நாட்டுக்கு செல்கின்றனர்.
தமிழக போலீஸ் துறைக்கு கலைச்செல்வன், சர்வேஸ்ராஜ், சுகுணாசிங், சக்திகணேசன், ஸ்ரீநாதா, சுஜித்குமார், அரவிந்த்மேனன், அருண்பாலகோபாலன், ருபேதா சலாம் என்ற 9 ஐ.பி.எஸ். அதிகாரிகள் புதிதாக பணியில் சேர்ந்துள்ளனர். 28 வாரங்கள் இவர்கள் பல்வேறு பயிற்சியை முடித்துள்ளனர்.

சென்னை போலீசில் ஜூலை மாதம் 8-ந் தேதியில் இருந்து 11-ந் தேதி வரை பயிற்சி பெற்றனர். போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இவர்களுக்கு பாடம் நடத்தினார்கள்.
இவர்களில் 4 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். கலைச்செல்வன் ஈரோட்டையும், சர்வேஸ்ராஜ் சென்னை வேளச்சேரியையும், சுகுணாசிங் திருவள்ளூரையும், சக்திகணேசன் கோவையையும் சேர்ந்தவர்கள். ஒரே பெண் அதிகாரியான ருபேதா ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவர். 2 பேர் கேரளாவையும், 2 பேர் வடமாநிலத்தையும் சேர்ந்தவர்கள்.
இவர்கள் 9 பேரும் இஸ்ரேல் நாட்டுக்கு நவீன பயிற்சிக்காக செல்கிறார்கள். புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள 150 ஐ.பி.எஸ். அதிகாரிகளை மத்திய அரசு இஸ்ரேலுக்கு அனுப்புகிறது. அவர்களுடன் இந்த தமிழக ஐ.பி.எஸ். அதிகாரிகளும் செல்கிறார்கள். 15 நாட்கள் அங்கு தங்கியிருந்து தீவிரவாதத்தை ஒழிப்பது தொடர்பாக இவர்கள் பயிற்சி பெறுவார்கள்.
இஸ்ரேல் நாட்டு போலீசார் தீவிரவாதிகளை ஒழிக்க நவீன யுக்திகள் மற்றும் தொழில்நுட்பம், நவீனரக ஆயுதங்களை கையாளுகிறார்கள். அது தொடர்பான பயிற்சியை நமது ஐ.பி.எஸ். அதிகாரிகள் பெறுகிறார்கள். இஸ்ரேலில் உள்ள ஜெருசலேம் நகருக்கு அருகே உள்ள நவீன போலீஸ் பயிற்சி அகாடமியில் தங்கியிருந்து இவர்கள் இந்த பயிற்சியை பெறுவார்கள்.
இந்திய ஐ.பி.எஸ். அதிகாரிகள், குறிப்பாக தமிழக ஐ.பி.எஸ். அதிகாரிகள் இஸ்ரேல் நாட்டில் நவீன பயிற்சிக்காக செல்வது இதுவே முதல்முறை என்று போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக