தீண்டாமை கொடுமையிலிருந்து விடுபடும் நோக்கில் ஒரு கிராமமே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளது, அதுவும் அவர்கள் ஏற்கனவே அறிவித்தபடி நாடாளுமன்றத்துக்கு முன்பு பந்தல் அமைத்து பகிரங்கமாக இஸ்லாத்தை ஏற்றனர்.
ஹரியானா மாநிலம் 'ஹிசார்' மாவட்டத்தின் 'பகானா' கிராம மக்கள், நாடாளுமன்றத்துக்கு முன்பாக இஸ்லாத்தை ஏற்கப்போவதாக
அறிவித்ததையடுத்து அப்பகுதி முழுவதையும், போலீஸ் வளையம் அமைத்து. சீல் வைத்துவிட்டது.
அதையும் மீறி, 50-க்கும் மேற்பட்டவர்கள், தாங்கள் அறிவித்தபடியே 'கலிமா' சொல்லி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதுடன் 'உளூ' செய்து தொழுகையையும் நிறைவேற்றினர்.
காவல்துறையின் அச்சுறுத்தலையும் மீறி முஸ்லிம்கள் சிலரும் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு மேற்படி தலித் மக்களை வரவேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக