Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 3 ஆகஸ்ட், 2015

பாபரி மஸ்ஜித் அறிக்கையில் இந்து தீவிரவாத்தைக் குறித்து எழுதியுள்ளேன் - நீதிபதி லிபர்ஹான்!

பாபரி மஸ்ஜித் அறிக்கையில் இந்து தீவிரவாத்தைக் குறித்து எழுதியுள்ளேன் - நீதிபதி லிபர்ஹான்!

புதுடெல்லி:இந்து தீவிரவாதத்தைக் குறித்து பாபரி மஸ்ஜித் இடிப்பு குறித்த விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக நீதிபதி மன்மோகன் சிங் லிபர்ஹான் தெரிவித்துள்ளார்.இந்து தீவிரவாதம் என்ற வார்த்தையை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுதான் முதன் முதலாக பிரயோகித்ததாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று முன் தினம் தெரிவித்திருந்தார்.இதற்கு பதில் அளிக்கும் விதமாக பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட சம்பவத்தைக் குறித்து விசாரணை நடத்திய நீதிபதி லிபர்ஹான் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
’பாபரி அறிக்கையில் தெளிவாக இந்து தீவிரவாதம் என்று எழுதியுள்ளேன்.இதில் இருந்து நான் பின்வாங்கவில்லை.நான் எனது பார்வையை மாற்றினால் கூட இதனை அழித்து விடமுடியாது.நான் ஒரு அரசியல்வாதி அல்ல.முதன் முதலாக இந்து தீவிரவாதம் என்ற வார்த்தையை நான் தான் பிரயோகித்திருப்பேன்.எந்த வகை தீவிரவாதமும் தவறுதான்.அதில் மரணிப்பவர்கள் நிரபராதிகளாவர்.’ என்று லிபர்ஹான் தெரிவித்துள்ளார்.
1992-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி பாபரி மஸ்ஜித் ஆர்.எஸ்.எஸ் கரசேவகர்களால் இடிக்கப்பட்டது.பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த மன்மோகன்சிங் லிபர்ஹான் தலைமையிலான கமிஷன் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்டது.1000 பக்கங்களை கொண்ட அறிக்கை 17 ஆண்டுகளுக்கு பிறகு 2009-ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக