ஃபரீதாபாத்: ’இரண்டு மணிநேரம் கிடைத்துள்ளது.அனைத்து முஸ்லிம்களையும் கொன்றொடுக்குவோம்’ என்ற ஆக்ரோஷ முழக்கத்துடன் வன்முறையாளர்கள் அடாலி கிராமத்தில் நுழைந்தனர்.அப்பகுதியின் எஸ்.ஐ
பாபுலால் டாடிக் கிராமத்திற்கு வந்து திரும்பிச் சென்ற உடனே டிம்பிள் என்ற ஜாட் இளைஞரின் தலைமையிலான கும்பல் வந்தது.அவர்கள் கண்ணில் பட்டதையெல்லாம் தீக்கிரையாக்கினர்.25 வீடுகளும், கடைகளும், நான்கு ட்ராக்டர்கள், மூன்று கார், இரண்டு ஆட்டோரிக்ஷாக்கள், 40 பைக்குகள் ஆகியவற்றை தீக்கிரையாக்கினர்.இம்மாதம் 25-ஆம் தேதி ஹரியானா மாநிலம் பல்லாபர்கில் நடந்த கலவரத்தை விவரிக்கிறார் நேரடி சாட்சியான நஸீம் அல்வி.
கிராமத்திற்கு வருகை தந்த இன்ஸ்பெக்டர் பாபுலாலிடம் அப்பகுதியில் பிரச்சனைகள் உருவாக வாய்ப்பு இருப்பதாக கிராமவாசிகள் தெரிவித்திருந்தனர்.ஆனால், அவர் அதனை பொருட்படுத்தவில்லை.இங்கு ஒரு பிரச்சனையும் ஏற்படாது என்று கூறியவாறு சிரிப்பை உதிர்த்துள்ளார்.அவர் சென்று 10 நிமிடங்களுக்குள் கலவரம் துவங்கியது.’நமக்கு இரண்டு மணிநேரம் அவகாசம் கிடைத்துள்ளது.அதற்குள்ளாக அனைத்து முஸ்லிம்களையும் கொன்றொழிக்கவேண்டும் என்று முழக்கமிட்டனர்.கலவரம் துவங்கியவுடன் கிராமவாசிகள் அங்கிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் மற்றும் அவசர போலீஸ் உதவிக்கான நம்பர் 100க்கும் அழைத்து உதவி கோரியுள்ளனர்.ஆனால், யாரும் பாதுகாப்புக்கு வரவில்லை.கலவரம் ஆரம்பித்து சரியாக இரண்டரை மணிநேரம் கழித்தே போலீஸ் வந்ததாக நஸீம் கூறுகிறார்.ஸஹீர்தீன் – நிஸாரா தம்பதியினரின் 7 மாத குழந்தை ராபிஆவை பெட்ரோல் ஊற்றி தீயிலிட்டு பொசுக்குவதற்கான கலவரக்காரர்களின் முயற்சியை அப்பகுதி மக்கள் தடுத்து விட்டனர்.குழந்தையின் மீது பெட்ரோலை ஊற்றிவிட்ட தீப்பந்தத்தை குழந்தையின் மீது வன்முறையாளர்கள் எறியும் முன்னர் அக்குழந்தையை பசுவுக்காக கொடுக்க வைத்திருந்த தண்ணீரில் எறிந்து காப்பாற்றியுள்ளனர்.
வன்முறையாளர்களில் ஒருவரை கூட போலீஸ் கைதுச் செய்யவில்லை.கலவரத்திற்கு தலைமை தாங்கிய டிம்பிளை கிராமவாசிகள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்த பிறகும் அவனை விடுவித்ததாக கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.கலவரம் தொடர்பாக சாதாரண பிரிவில் 13 வழக்குகளை போலீஸ் பதிவுச் செய்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக