போபால்: அசைவமான முட்டையை குழந்தைகளுக்கான சத்துணவில் சேர்க்கக் கூடாது என்று சைவப் பிரியரான மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தடை விதித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில்
அங்கன்வாடி மையங்களில் மதிய உணவில் மாணவர்களுக்கு ஊட்டச்சத்துக்காக முட்டையை சேர்க்க முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் அலிராஜ்பூர், மண்ட்லா, ஹோசன்காபாத் மாவட்டங்களில் சோதனை முறையில் முட்டையை சேர்க்க உத்தரவிட்டார்.இதையடுத்து மாவட்ட அதிகாரிகள் மதிய உணவில் முட்டையை சேர்க்கலாம் என்று அரசுக்கு பரிந்துரை செய்தனர். முட்டையில் புரோட்டீன் சத்துக்கள் அதிகம் இருப்பதால் வாரம் இருமுறை முட்டையை சேர்க்கலாம் என்றும் அவ்வாறு செய்தால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு நோய் வராது என்றும் அதில் தெரிவித்து இருந்தனர்.
ஆனால் மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகானோ சைவப்பிரியர் என்பதால் அவர் முட்டை ‘அசைவம்’ என்று கூறி அதிகாரிகளின் யோசனையை ஏற்க மறுத்து விட்டார். முட்டைக்குப் பதிலாக கர்ப்பிணிகளுக்கும், மாணவர்களுக்கும் ஊட்டச்சத்துமிக்க பால் வழங்கப்படும் என்றும் சிவராஜ்சிங் சவுகான் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக