புதுடெல்லி: தொழிலாளர்களுக்கு ஏதும் உதவிகள் செய்யாவிட்டாலும் அவர்களிடம் உள்ளவற்றை பறிக்க வேண்டாம் என ஆர் எஸ் எஸ் மூத்த தலைவர் மோடிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்
ஆர்.எஸ்.எஸ்-ன் தொழிலாளர் அமைப்பான BMS மற்ற வர்த்தக தொழிலாளர் அமைப்புகளுடன் இணைந்து பாஜகா அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மோடி ஏழ்மையின் நிலையை புரிந்து கொள்ள மாட்டார். இந்தியாவின் மேற்கு பகுதிகளிலும் கிழக்கு பகுதிகளிலும் வறுமையை நிலையை அவர் பார்க்க வேண்டும். வறுமைநிலை என்பது ஒருவன் வெறும் சோற்றுடன் மிளகாயும் உப்பும் உண்டு வாழும் நிலை ஆகும் என BMS அமைப்பின் செயலாளர் K .C மிஸ்ரா கூறினார்.
BMS அமைப்பின் செயலாளரான K .C மிஸ்ரா ஆர்.எஸ்.எஸ் இன் இணை அமைப்பான (சங்கதான் மந்திர் என்ற) பாரதிய மஜ்தூர் சங்கை சேர்ந்தவர் BMS இல் செயலாற்றும் 22 ஆர் எஸ் எஸ் பிரச்சகரர்களில் மிஸ்ரா மிகவும் மூத்தவர் , தெங்கடி பவனில் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்கு அவர் பேசுகையில் . மோடியின் அரசு தொழிலாளர் நலனுக்காக எதையும் செய்ய வில்லை. குறைந்தது பெரும் போராட்டங்களுக்குப் பின் தொழிலாளர்கள் பெற்றிருக்கும் உரிமைகளை அபகரிப்பதை கண்டிப்பாக தவிர்த்துக் கொள்ள வேண்டும். கரிபி (ஏழை) என்பதன் முழு அர்த்தம் மோடிக்கு தெரியாது. இந்தியாவின் கிழக்கு பகுதிகளை பார்த்து அதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.
“கரிபி என்பதை மோடி பரிந்து கொள்ள மாட்டார். இந்தியாவின் மேற்குப் பகுதிகளின் வறுமை நிலையை தான் அவர் பார்த்துள்ளார். அங்கு யார் ஒருவர் வீடும், காரும் இன்ன பிற பொருள்களுடன் மேற்கொண்டு ஒரு மாடி கட்ட இயலாதவரோ அவரே ஏழை என்பதாக மக்கள் நினைக்கின்றனர். ஆனால் கிழக்கிந்திய பகுதிகளான ஜார்கண்ட் . ஓடிஸா, மேற்கு வங்காளம், பீகார் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் ஏழை என்பது குடிசையில் இருந்து கொண்டு பெரும்பாலும் மிளகாயும் உப்பும் மட்டும் சேர்த்து வெறும் சோற்றை உண்டு வாழ்பவர்களே எழைகள்.
உண்மை நிலை என்னவென்றால் பிஜேபி ஆட்சியில் தொழிலாளர்களாக வேலை செய்வது என்பது கடினமானதாக உள்ளது. நாங்கள் எப்போதுமே பிஜிபிக்குதான் வாக்களிதுள்ளோம். ஆனாலும் பிஜேபி அரசுடன் நாங்கள் கடுமையாக போராட வேண்டி உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக